33.13 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள விழுப்புரம் நகராட்சி 1919 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிலையில், 1953ஆ, ஆண்டு 2 ஆம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து முதல்நிலை நகராட்சியாக 1973 முதல் தரம் உயர்த்தப்பட்டது.

  இந்நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. 1922 ஆம் ஆண்டில் முதல்  இதுவரை 19 தேர்தல்களை விழுப்புரம் நகராட்சி சந்தித்துள்ள நிலையில் 20ஆவது தேர்தலை சந்திக்க விழுப்புரம் நகராட்சி தயாராகி வருகிறது. இந்த நகராட்சி நிர்வாகத்தை இதுவரை தி.மு.க., அதிமுக. என மாறி, மாறி கைப்பற்றி பொறுப்பு வகித்துள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் நகராட்சி தலைவர் பதவியை ஆண்கள் மட்டுமே அலங்கரித்து வந்த நிலையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக தற்போது நடைபெற உள்ள தேர்தலில் நகரமன்ற தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


இதனால் விழுப்புரம் நகரமன்ற தலைவர் பதவியை கைப்பற்ற போகும் பெண் யார்? என்று தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி நகர மக்கள் மத்தியிலும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று 32 வார்டுகளில் திமுக வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.


திமுக வேட்பாளர் விபரம்:


வார்டு 2 - எஸ்.கே.எஸ். அன்சர் அலி


வார்டு 3 -கோமதி பாஸ்கர்


வார்டு 4 - காமாட்சி செந்தில்குமார்


வார்டு 5 - நந்தா நெடுஞ்செழியன்


வார்டு 6- மகாலட்சுமி வைத்தியநாதன்


வார்டு 7 - கன்னிகா வெற்றிவேல்


வார்டு 8 – புஷ்பராஜீ


வார்டு 10 - பிரேமா முரளி


வார்டு 11- உஷாராணி மோகன்ராஜ்


வார்டு 12 - ஜே. பத்மநாபன்


வார்டு 13 - நவநீதம் மணிகண்டன்


வார்டு 14- சித்திக் அலி


வார்டு 15 - கிமை பிரிஜித் பிரியா பிரேம்குமார்


வார்டு 17 - ஜெயந்தி மணிவண்ணன்


வார்டு 18 - சசிரேகா பிரபு


வார்டு 19 - வசந்தா அருளரசு


வார்டு 20 - ஸ்ரீதேவி சுரேஷ்பாபு


வார்டு 21 - தீபா தென்றல்சம்பத்


வார்டு 23 - எம். சண்முகம்


வார்டு 24 - பி. மணி


வார்டு 25 -செ. அமிர்தராஜ்


வார்டு 26 -சந்திரா சண்முகம்


வார்டு 29 - இரா. சக்கரை


வார்டு 30 - சத்யவதி வீரநாதன்


வார்டு 31 - பி.கே.சங்கர்


வார்டு 33 - சாவித்திரி அருள்


வார்டு 34 - எம். ராமு


வார்டு 36 - ஆர்.மணவாளன்


வார்டு 37 - ஆர். கோதண்டராமன்


வார்டு 38- என். சிவக்குமார்


வார்டு 39 - வி. புருஷோத்தமன்


வார்டு 40 -ஜனனி ஐயப்பன் (எ) என்.டி.தங்கம்


மொத்தமுள்ள 42 வார்டுகளில் 33 வார்டுகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள 9 வார்டுகளில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிகள் களம் காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.