. ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலை விவகாரம் இச்செய்தி பரப்பியதாக யூடியூபர் துரைமுருகன் மீண்டும் கைது 


 


2. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல தனியார் பெண் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று காலை முதல் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



3. நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில், நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்ற வேண்டும் என ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.


 


4. ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சக்தி கிச்சன் கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்த பிபின்(34) மற்றும் கவியரசன்(32) ஆகிய இருவரையும் வெள்ளவேடு போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி விடுதியில் தொழிலாளர்களுக்கு இடம் அளித்த மேலாளர் செந்தில்குமார், ஹேமலதா மற்றும் சமையலர் முனுசாமி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



5. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட ஊர்க்காவல் படை வீரரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



6. உத்திரமேரூர் அருகே அரசு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடங்களை அகற்றி, அந்நிலங்களை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டனர்.



7. சென்னை மாநகராட்சி சார்பில் கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.150 கோடியில் சுமார் 40 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது..


8.  ஏலச்சீட்டு நடத்தி ரூ 49 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட தாய்-மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 


9. இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மத்திய அரசை, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


 


10 . விழுப்புரத்தில், சென்னை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டியின் மீது 5 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


 

 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



பேஸ்புக் பக்கத்தில் தொடர



ட்விட்டர் பக்கத்தில் தொடர



 



யூடியூபில் வீடியோக்களை காண