1. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளிடம் நேற்று, விருப்ப மனு அளித்தனர்.

 

2. காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டத்தில், பாரத பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் விவசாயிகள் இணையம் வழியாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது

 



3. தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

4. வாஜாலாபாத் அடுத்த தென்னேரி ஏரியை விவசாய பாசனத்துக்கு எம்பி செல்வம், எம்எல்ஏ க.சுந்தர் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

 

5. அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர்கள் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

6. காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது .

 

தாம்பரம் பகுதி : பெருமாள் கோயில் தெரு , திருச்செந்தூர் நகர் , திருத்தனி நகர் , பல்லவ கார்டன் , பெருமாள் நகர் பகுதி , 200 அடி துரைப்பாக்கம் ரோடு , ஆழகப்பா நகர் , ஏ . ஆர் . ஜி நகர் , இராணுவ குடியிருப்பு , தாஜ் ஃபிளைட் கிட்சன் , பி , பி , சி , எல் , எல் & டி மற்றும் இந்தூஸ்தான் பெட்ரோலியம் பகுதி.

 

7. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்



 

8. வீடு வாங்கியவரின் அனுமதியின்றி, புது வீட்டு முன்பதிவை ரத்து செய்த கட்டுமான நிறுவனம், 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டுடன் வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

9. பல்லாவரம், பழைய டிரங்க் சாலை வழியாக, நேற்று முன்தினம் லோடு ஆட்டோ ஒன்று சென்றது. அந்த ஆட்டோவில் இருந்து, ரேஷன் அரிசி கொட்டியது.இதை பார்த்து சந்தேகமடைந்த பல்லாவரம் ரோந்து போலீசார், அந்த வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர். அதை சோதனை செய்து பார்த்தபோது 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது அதை பறிமுதல் செய்தனர்.

 

10. 14 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.