சென்னை சூரபேட் 16 வது தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் வயது 35 இவர் திரு.வி.க நகர் எஸ்.ஆர்.பி கோவில் வடக்கு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த 3 மர்ம நபர்கள் குடிபோதையில் கத்தியைக் காட்டி மிரட்டி பெட்டிக்கடையில் கள்ளாவில் இருந்த 2,500 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கனகராஜை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து கனகராஜ் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த சௌந்தர் (21). அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22), திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (20) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இவரிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த திரு.வி.க போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வியாசர்பாடியில் பள்ளியில் டி.வி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிய நபர் கைது
சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் சிலர் உள்ளே நுழைந்து பள்ளியில் இருந்த டி.வி, லேப்டாப் , மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் வியாசர்பாடி மாதா கோயில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் புளியந்தோப்பு நேரு நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் என்னும் ஸ்பீடு அஜித் (20) என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே வியாசர்பாடி, எம்.கே.பி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து இவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பள்ளியிலிருந்து டிவி , சவுண்ட் சிஸ்டம் , லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து இவரிடமிருந்து பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவருடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.