1. பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
2. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் இருந்து இதுவரை 18.5 டிஎம்சி உபரிநீர் வெளியேற்றப்பட்டு, கடலில் கலந்துள்ளது.
3. இலங்கைக்கு கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்பதால், டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
4. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை முதல் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
5. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தொற்றில் இருந்து பூரண நலம் பெற வேண்டி கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
6. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வி.கே.சசிகலா பார்வையிட்டு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட இல்லலூர், பெரியார் நகர், பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்களை நேரில் சந்தித்த சசிகலா, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
7. மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை செருப்பால் அடிக்க அனுமதி கேட்டு திருவள்ளூர் ஆட்சியருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8. பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக அனுரத்னா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
9. செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியில் விக்கி என்கிற விக்னேஷ் என்பவர் வெட்டி படுகொலை. ஒழலூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்த போது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் விக்கியை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உடலை கைப்பற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை.
10. சென்னை வியாசா்பாடியில் சிறுவா்கள் காப்பகத்தில் இருந்து 3 சிறுவா்கள் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.