செங்கல்பட்டு (Chengalpattu) : செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 16 ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதிகள், 09 பள்ளி மாணவியர் விடுதிகள், 01 கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 04 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/மாணவியர்களும், கல்லூரி விடுதியில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ / மாணவியர்களுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகளும், பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும்.
தகுதி மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
- ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணாக்கர் இணைய வழியில் (Online) https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஏற்கனவே விடுதியில் தங்கி பயிலும் மாணாக்கர் புதுப்பித்தல் விண்ணப்பத்தினை (Renewal) இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
- இணைய வழியில் விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம், அவ்வாறு நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்களை சிறப்பினமாக கருதி, அவ்விடுதியில் அனுமதிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில், அவர்களையும் விடுதியில் தங்கி கல்வி பயில இருக்கும் பட்சத்தில், தேர்வு குழுவின் ஒப்புதல் பெற்று அனுமதிக்கப்படும்.
- 4-ஆம் வகுப்பு முதல் கல்லுhரி வரை பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்(85%), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணாக்கர் (10%), பிற வகுப்பினர் (5%) என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படும்.
- பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும், மாணவியருக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது.
- பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- விடுதியில் தங்கி கல்வி பயில தெரிவு செய்யப்படும் மாணாக்கர் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் விடுதியில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினாலோ அல்லது விடுதிக் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டாலோ அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அதற்குண்டான கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் உறுதி மொழிப் பத்திரம் அளிக்கப்பட வேண்டும்.
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணாக்கருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லுhரிகளில் கல்வி பயிலும் மாணாக்கர் இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்ட மாணாக்கரின் எண்ணிக்கையில் காலியிடம் இருக்கும் நேர்வில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுhரியில் பயிலும் மாணாக்கரையும் சேர்த்தக்கொள்ளப்படும்.
- பள்ளி விடுதியின் சேர்க்கை நாள்:
விண்ணப்ப பதிவு துவங்கும் நாள் : 07.06.2023
முடிவடையும் நாள் : 30.06.2023
எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்வி பயின்று வரும் மாணவ/மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.