கடத்தல் நகரமாக மாறும் சென்னை.. சிக்கிய கடத்தல் ராணி.. போட்டுக் கொடுத்த மோப்ப நாய்

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோ போனிக் கஞ்சா போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். 

Continues below advertisement

சென்னைக்கு விமானத்தில் மிகப்பெரிய அளவில், போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், தனிப்படை அமைத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

அதிகாரிகள் சோதனை 

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நிறுத்தி பரிசோதித்தனர். அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது இளம்பெண் ஒருவர், சுற்றுலா பயணியாக, தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார்.

அந்த இளம் பெண் பயணி மீது, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அந்த பெண் பயணியை, சுங்க அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது பெண் பயணி, தனது உடைமையில் காலிஃப்ளவர் மற்றும் மஸ்ரூமுகள் மட்டுமே இருப்பதாக கூறினார். அதோடு அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

பிடித்துக் கொடுத்த மோப்ப நாய்

இதை அடுத்து அவருடைய உடமைகளை, சுங்கத்துறை மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தினர். அந்த மோப்பநாய், பெண் பயணியின் உடமையை மோப்பம் பிடித்து விட்டு, உடனடியாக தரையில் அமர்ந்தபடி, தனது கால் நகங்களால் தரையை கீறி சைகை காட்டியது. அவ்வாறு சைகை காட்டினால், அந்த உடமையில் சந்தேக பொருள் இருக்கிறது என்று அர்த்தம். 

இதை அடுத்து, சுங்க அதிகாரிகள், அந்த பெண் பயனியின் உடமையை திறந்து பார்த்து பரிசோதித்தனர். அதனுள் 14 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை பிரித்து பார்த்த போது, காலிபிளவர் மற்றும் மஸ்ரூம் உங்களுக்கு இடையே, உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த 14 பார்சல் களிலும் சுமார் 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடி.

 

இதை அடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த பெண் பயணியை கைது செய்தனர். அவர் கடத்திக் கொண்டு வந்த உயர்ரக கஞ்சா போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர். அதோடு அவரை மேலும் விசாரித்த போது, இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்த பெண் என்று தெரிய வந்தது. எனவே இவர் இந்த கஞ்சா போதைப் பொருளை, சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்தார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவருடைய உடமைகளை சோதனை நடத்தினார். 

அவர் உடமைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 7 பார்சல்களை, பிரித்துப் பார்த்தனர். அதனுள் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பார்சல்களில் சுமார் 3.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 3.5 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அந்த கடத்தல் பயணியை கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தொடரும் சம்பவங்கள்

சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பு, தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புடைய, 6 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வட மாநில இளம்பெண் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தாய்லாந்து நாட்டிலிருந்து, கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ. 3.5 கோடி மதிப்புடைய 3.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, சென்னை சேர்ந்த ஆண் பயணி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 நாட்களில் ரூ.9.5 கோடி மதிப்புடைய, 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் உயரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வட மாநில இளம் பெண் உட்பட 2 போதை கடத்தல் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement