ChennaI Rain:  சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.


சென்னையில் பரவலாக மழை:


அதன்படி, எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், கிண்டி, சேத்துப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. நேலும் கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு மற்றும் சூளைமேடு ஆகிய பகுதிகளிலும் விடிய விடிய மழை பரவலாக கொட்டி வருகிறது. அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளிலும்,  செங்கல்பட்டு பகுதியிலும் நள்ளிரவும் முதல் மழை தொடர்ந்து கொட்டி வருகிறது.


இதனால், பகல் நேரங்களில் வாட்டி வரும் வெயிலை போக்கும்விதமாக,  குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதேநேரம், சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலை மழை தொடர்வதால காலை நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மற்றும் நடைபய்ற்சி மேற்கொள்பவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.


வானிலை மையம் எச்சரிக்கை:


முன்னதாக நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று என்று” எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


மழை தொடர வாய்ப்பு - வானிலை அறிக்கை:


வானிலை மையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக எழும்பூர்,கிண்டி,மதுரவாயல்,மாம்பலம்,மயிலாப்பூர்,தாம்பரம்,திருத்தணி,உத்திரமேரூர்,வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், அமைந்தக்கரை,அயனாவரம்,கலவை,பெரம்பூர்,புரசைவாக்கம்,மாதவரம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.