சென்னை, திருவெற்றியூர்  அரிவாகுளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இப்பகுதியில் வசித்து வரும் நிலையில் B பிளாக்கில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்து சேதமான நிலையில் பலமுறை அப்பகுதி மக்கள் வீட்டின் கூரைகள் இடிந்து விழுவது தொடர்பாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எவ்வித அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் குடியிருப்புகளை எட்டிக் கூட பார்க்காமல் அலட்சியம் காட்டி வந்ததால் இன்று காலை முதலே வீட்டிலிருந்த தரை தளங்கள் முதல் மேல் தளங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தி வந்த நிலையில் வீட்டில் இருந்த டைல்ஸ்கள் விழ தொடங்கி உள்ளன.



 

இதனால்  விபத்து ஏற்படும் என முன்பே அறிந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் அருகில் இருந்த தங்கள் தெரிந்தவர்கள் இல்லத்திற்கு குடிபெயர்ந்தனர். மேலும் ஒரு சிலர் மட்டும் தங்களுடைய ஆவணங்கள் நகைகள் எடுப்பதற்காகவும் பொருட்களைப் பாதுகாக்கும் குடியிருப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.  இடிந்த குடியிருப்புக்குள் இருக்கும் நபர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவொற்றியூர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையாக மீட்ட பின்பு உயிர் சேதம் குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.