ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
Greater Chennai Corporation: ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சி சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கணக்கெடுப்பை நடத்த உள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சி சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கணக்கெடுப்பை நடத்த உள்ளது.
சென்னை மாநகராட்சி பல்வேறு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் 408 கி.மீ சாலைகளை ட்ரோன் மற்றும் கோ-ப்ரோ கேமராக்களைப் பயன்படுத்தி வரைபடமாக்குவதன் மூலம் நகர சாலைகளை மீட்டெடுக்க ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்க கிரேட்டர் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்து எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளின் அசல் அகலங்களை மீட்டெடுப்பதன் மூலம் சாலைகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான கணக்கெடுப்பை சென்னை மாநகராட்சி, AI மேப்பிங்கில் நிபுணத்துவம் பெற்ற RoadMetrics என்ற நிறுவனத்துடன் இணைந்து செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “சாலைகள் மற்றும் வரைபடப் பொருட்களை ஸ்கேன் செய்ய சென்சார்கள் கொண்ட டேஷ்போர்டு கேமராக்களைப் பயன்படுத்தி AI கணக்கெடுப்பு நடத்தப்படும். பின்னர் அவை அசல் வரைபடத்துடன் ஒப்பிடப்படும்” எனத் தெரிவித்தார்.
பெங்களூரில் இதேபோன்ற ஒரு திட்டத்தை நிறுவனம் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே. குமரகுருபரன் தெரிவித்தார்.
மேலும், "இந்த திட்டத்தின் முதல் கட்டம் அண்ணா சாலை, ஈ.வி.ஆர் பெரியார் சாலை, காமராஜர் சாலை மற்றும் ஜி.எஸ்.டி சாலை போன்ற முக்கிய சாலைகளில் மேற்கொள்ளப்படும்" என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த திட்டம் ரூ.25 லட்சம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது இரண்டு கட்டங்களாக முடிக்கப்படும், முதல் கட்டம் மார்ச் மாதத்தில் தொடங்கி 408 கி.மீ. அளவீடு செய்யப்படும், இரண்டாம் கட்டம் நவம்பரில் திட்டமிடப்பட்டுள்ளது.”எனத் தெரிவித்தார்.
இதுமட்டுமில்லாமல், உள்கட்டமைப்பு மேம்பாட்டைத் தவிர, நகர மேம்பாடு மற்றும் திட்டமிடலுக்கும் இந்த திட்டம் உதவும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.