No Traffic, No Tension... இனி சென்னைக்கு ஈஸியா போகலாம் ; தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம்
விழுப்புரம் : திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் 32 கி.மீ., இருவழி சாலை 238 கோடி ரூபாயில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி நிறைவு பகுதிக்கு வந்துள்ளது.

விழுப்புரம் : திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் 32 கி.மீ., இருவழி சாலை 238 கோடி ரூபாயில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி நிறைவு பகுதிக்கு வந்துள்ளது. இந்த வழியின் மூலம் சிரமம்ன்றி சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லலாம்.
திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழி சாலை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் 32 கி.மீ., இருவழி சாலை மிகவும் பழமை வாய்ந்த கிருஷ்ணகிரி சாலை ஆகும். இந்த சாலை வழியாக கடந்த 20 ஆண்டுகளாக வாகன போக்குவரத்து, அதிகரித்ததால், திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்ல ஒன்றரை மணிநேரம் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். மேலும் திருச்சி - சென்னை மற்றும் புதுச்சேரி - பெங்களூரு, புதுச்சேரி இ.சி.ஆர்., வழியாக சென்னை போன்ற சாலைகளில் ஏதேனும் திடீரென விபத்துகள் ஏற்பட்டால், அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அது போன்ற நேரங்களில் அதிகாரிகள் இந்த சாலை வழியாக போக்குவரத்தை மாற்றி விடுவார்கள். அந்த நேரத்தில் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல சிரமமாக இருக்கும்.
Just In




அதனால் இந்த இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற அரசு முடிவு செய்து, கடந்த 2021-22ம் ஆண்டு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 238 கோடி ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்தது. மேலும் 32 கி.மீ., துார சாலையை இரண்டு பிரிவாக பிரித்து ஒப்பந்தம் கோரப்பட்டது. அதன் படி இந்த சாலைப் பணியை 2 ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த சாலைப் பணிகளை முடித்தாக வேண்டும் என்ற அதிகாரிகளின் உத்தரவால் சாலை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
இந்த சாலையில் இருந்த 67 சிறிய, பெரிய பாலங்களை அகற்றி புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சாலையோரம் உள்ள நீர்பிடிப்பு கிராமங்களில் 10 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. மரக்காணம் - திண்டிவனம் இணைப்பு சாலை பகுதி, எண்டியூர், நல்லாளம், பிரம்மதேசம், முருக்கேரி, கந்தாடு, மரக்காணம் உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. மேலும் சாலை பணிகள் 95சதவீதம் நிறைவு பெற்றது.
தற்போது, இந்த நான்கு வழிச்சாலையின் முகப்பு பகுதியான திண்டிவனம் - மரக்காணம் கூட்ரோட்டில் ரோடு டிவைடர், சாலையோரம் பிளேவர் கல் புதைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றது. இதேபோல் மரக்காணம் கூட்ரோட்டில், சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறவழிச்சாலை வழியாக வரும் இடத்தில் சாலை அகலப்படுத்தப்பட்டு, சர்வீஸ் சாலை போடும் பணிகள் நடந்து வருகின்றது.
இதையும் படிங்க: Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
நான்கு வழிச்சாலையில் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் வரையில் புதிய சாலை பணிகள் முடிவடைந்து பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் முழு பயன்பாட்டிற்கு கொண்டுவருவதன் மூலம் பயண நேரம் மற்றும் வாகன நெரிசல் இல்லாமல் திண்டிவனம் வழியாக மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு விரைவாக செல்லலாம்.