சர்வதேச சிறுதானியங்கள் வருடம் 2023 முன்னிட்டு "சிறுதானிய உணவுப் பெருவிழா' செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம் இரயில்வே மைதானத்தில் நடைப்பெற்றது. பாதுகாப்பற்ற மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உண்பதால் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

 



NCD என்று சொல்லப்படுகின்ற தொற்றா நோய்கள் நீரிழிவு நோய்கள் இரத்த கொதிப்பு, ஊட்டச் சத்துக்கள் குறைபாடு உடல் பருமன், குழந்தையின்மை, புற்றுநோய் போன்ற நோய்களின் பாதிப்பு குறைய வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை மையமாக கொண்டு மக்கள் சரியான பாதுகாப்பான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக துறையின் மூலம் இவ்வாறான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறன.



உணவு பாதுகாப்பு சிறுதானிய உணவுப் பெருவிழாவில் 11 கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவியர்கள் சுமார் 700 நபர்கள் 600-க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவுகளை காட்சிப்படுத்திய உலக சாதனை நிகழ்வு நடைப்பெற்றது.

 

மேலும் 70 மாணவ மாணவிகள் 300 கிலோ எடை கொண்ட சிறு தானியங்களினால் செய்யப்பட்ட கேக் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.



 

 

மாணவர்கள் பெரும்பாலும் குப்பை உணவுகள் என சொல்லக்கூடிய Fast Food அதிகமாக விரும்பி உண்ணும் இந்த காலத்தில் சிறு தானியங்களில் சத்தான உணவுகளை சமைத்து அவர்களே காட்சிப்படுத்தி உண்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கியது பாராட்டக்கூடியதாக இருந்தது. மேலும் இந்த அரங்கத்தில் சிறுதானிய உணவுகள் தவிர பிற உணவுகள் விற்பனைக்கு வைக்கப்படாமல் இருந்தன.

 

இங்கு வருகை புரிந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் இந்நிகழ்ச்சியின் நோக்கம் புரிந்து ஆரோக்கியமான சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணரும்படியாக இருந்தது. பல்வேறு அரசுத் துறையைச் சார்ந்த அரங்கங்களும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும் தமிழ்நாட்டின் பாரம்பரியகலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன.