சென்னையில்  ஒரு தொடக்கப்பள்ளியில் சாதிகளின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வருகைப் பதிவேடு எழுதப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


கொரோனா பெருந்தொற்றையடுத்து 19 மாதங்களுக்குப் பிறகு தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தனது பள்ளி மாணவர்களை மூன்று பேட்ச்களாகப் பிரித்துள்ளது ஒரு பள்ளி நிர்வாகம். மாணவர்களின் சாதி அடிப்படையில் 3ஆக பிரிக்கப்பட்டுள்ளனர். 
இது குறித்து பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்த நடைமுறை புதிதானதல்ல, இதே போன்ற வருகைப் பதிவேட்டு முறையை ஏற்கெனவே பின்பற்றி வருகிறோம். சாதி அடிப்படையில் மாணவர்களை நாங்கள் பிரிக்கவில்லை. ஒரே சாதியைச் சேர்ந்த மாணவர்கள் எதேச்சையாக ஒரே பேட்ச்சில் வந்துவிட்டனர். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என தெரிவித்தார். அவர் அந்த வருகை பதிவேட்டையும் எடுத்து காண்பித்தார். அதில் பட்டியலின மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(இந்து), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்( கிறிஸ்தவர்கள்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்கள்), முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நிர்வாகத் தேவைகளுக்காகத்தான் என்றும், மாணவர்களுக்கு சாதி பற்றி தெரியாது” என்றும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார். 




இது தொடர்பாக பேசிய சென்னை பெருநகர மாநகராட்சியின் துணை ஆணையர் (கல்வி) டி. சினேகா,   "எல்லா பள்ளிகளிலும், அகரவரிசையில் மட்டுமே வருகைப்பதிவு இருக்க வேண்டும். சாதி அடிப்படையில் வரிசைப்படுத்தி பெயர்களை எழுதுவது ஒருபோதும் நடைமுறையில் இல்லை, அது சரியாக நடைமுறைப்படுத்துவதை இனி உறுதி செய்வோம். இது குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றி.” என தெரிவித்தார்.  மேலும் மாணவர்களின் பெற்றோருக்கு இது குறித்து தெரியப்படுத்தப்படும் என்றும் மாணவர்களின் பேட்ச்கள் மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனெ சமூக செயற்பாட்டாளர் வி.கோபால கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஏதோ தொலைதூர கிராமங்களில் நடப்பதுபோல சென்னையில் இது நடப்பதை கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. ஆசிரியர்கள்தான் சாதிக்கு எதிரான மனநிலையை உருவாக்க வேண்டும். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் தெரிவித்தார்.


இது போன்ற நடைமுறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என  சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அகர வரிசையின் அடிப்படையில்தான் வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் பெயர்களை குறிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண