கேரளா மாநிலம் பாலக்காட்டை சோ்ந்தவா் சிகாபுதீன் (37) . இவா் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு மலப்புரம் போலீஸ் நிலையத்தில், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்வது உட்படி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசாா் சகாபுதீனை கைது செய்ய தேடினா். ஆனால் அவா் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாகிவிட்டாா். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர் . மேலும் சிகாபுதீன் மொபைல் எண்ணை வைத்து அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். காவல்துறையினர் தன்னை கைது செய்ய  நெருங்குவதை தெரிந்துகொண்ட சிகாபுதீன் உடனடியாக தப்பிப்பதற்காக முயற்சி செய்தார். இதனையடுத்து காவல்துறையினர் தெரியாமல் சிகாபுதீன் வெளிநாடு தப்பிச் சென்றார். 


 



காவல்துறையினர் கண்ணில் மண்ணைத் தூவி வெளிநாட்டிற்குச் சென்ற  சிகாபுதீனை பிடிப்பதற்காக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக கேரளா மலப்புரம் போலீஸ் துணை ஆணையா், சகாபுதீனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா். அதோடு அனைத்து சா்வதேச விமானநிலையங்களுக்கும் தகவல் கொடுத்து LON ( லுக் அவுட் நோட்டீஸ்)  அனுப்பி வைத்திருந்தாா். 


 


இந்நிலையில் நேற்று மாலை மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் கம்யூட்டரில் பரிசோதித்தனா். அந்த விமானத்தில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கேரளாவை சோ்ந்த சகாபுதீனும் வந்தாா். அவருடைய பாஸ்போா்ட்டை கம்யூட்டரில் ஆய்வுசெய்தபோது, கேரளா போலீசால் தேடப்படும்  தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

 



இதையடுத்து குடியுறிமை அதிகாரிகள் சகாபுதீனை வெளியே போகவிடாமல் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனா். அங்குள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனா்.  இது குறித்த தகவல் மலப்புரம் போலீஸ் துணை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மலப்புரம் போலீசார் தகவலை சரிபார்த்து, சம்பந்தப்பட்ட நபர் சகாபுதீன் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மலப்புரம் தனிப்படை போலீசாா், சகாபுதீனை சென்னை விமான நிலையத்திற்கு வந்து ஆவணங்களை சரிபார்த்து இன்று கைது செய்தனர். 


 


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...


இரு பெண்களை காதலித்த காதலன்: டாஸ் போட்டு ஒருவரை தேர்வு செய்த கிராம பஞ்சாயத்து!


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X