எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
ஃபெஞ்சல் புயலையொட்டி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
Continues below advertisement

AI படம்
Source : Twitter
சென்னையிலிருந்து தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து 270 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 260 கி.மீ தொலைவிலும், வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Continues below advertisement
ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை:
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று இரவிலிருந்து மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
- ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள். மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டில் மின் சுவிட்சுகைள 'ஆன்' செய்யும் போது கவனத்துடன் இயக்கவும்.
- வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.
- வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
- நீரில் நனைந்த பேன். லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.
- மின்சார மீட்டர் உபேயாகிக்கக்கூடாது. பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம்.
- மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள். மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர்பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
- சாலைகளிலும். தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீ நடப்பதா ஓடுவேதா விளையாடுவேதா மற்றும் வாகனத்தில் செவ்வேதா தமிழ்க்கப்பட வேண்டும். தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வைதயும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.
- மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம்.
- மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். கம்பங்களிலோ
- மின் சேவைகள் மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.