தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, தொடக்க நிறுவன வளர்ச்சியை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக சென்னை ஐ.ஐ.டி. (IIT - Madras) மற்றும் மும்பை ஐ.ஐ.டி. (IIT - Bombay) ஆகியவற்றுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க உள்ளதாக FedEx நிறுவனம் உறுதி அளித்துள்ளது. 


இது தொடர்பாக PIB வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் -, “ ஃபெட் எக்ஸ் (FedEx) கழகத்தின் துணை நிறுவனமும், உலகின் மிகப்பெரிய அதிவேக டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான FedEx எக்ஸ்பிரஸ், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களான மும்பை  ஐ.ஐ.டி., பாம்பே ஐ.ஐ.டி. ஆகியவற்றிற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், திறமையைப் பயன்படுத்துதல், நிலைத்தன்மை, தொடக்க நிறுவன வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் FedEx பொறுப்புணர்வை இந்தக் கூட்டுமுயற்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.




இரு ஐ.ஐ.டி. வளாகங்களிலும் உலக அளவில் அங்கீகரிக்கப்படும் 'உயர் சிறப்பு மையத்தை' உரிய உள்கட்டமைப்பு வசதிகளோடு அமைக்க இந்த முன்முயற்சி தனது பங்களிப்பை வழங்கும். ஆற்றல்மிக்க திறமையான நபர்களை ஊக்கப்படுத்துவதுடன் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பணிகளை தீவிரப்படுத்துதல், முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை திட்டங்களுக்கு உதவுதல், சுற்றுச்சூழலை தீவிரமாக ஊக்குவித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இந்த உயர்சிறப்பு மையம் முன்னிலை வகிக்கும்.


இந்த முன்முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த FedEx  கழகத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் சுப்ரமணியம், "விநியோக தொடர்களை அனைவருக்கும் உகந்த வகையில் சிறப்புடையதாக மாற்ற ஃபெட்எக்ஸ்-ஐச் சேர்ந்த நாங்கள் விரும்புகிறோம். போக்குவரத்து சூழலை மாற்றியமைப்பதைத் தாண்டி, நமது சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க உறுதிபூண்டிருக்கிறோம். இந்த இலக்குகளை அடையும் வகையில் இந்த மதிப்புமிக்க நிறுவனங்களுடன் எங்களது ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.


பம்பாய் ஐ.ஐ.டி. இயக்குநர் பேராசிரியர் சுபாசிஸ் சௌத்ரி கூறுகையில், FedEx உடனான எங்களது ஒத்துழைப்பு அதிநவீன வழங்கல் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் குறிப்பிடத்தக்க செயலாகும். விநியோகச் தொடர்களின் டிஜிட்டல் மாற்றம், டிஜிட்டல் ஒருங்கிணைப்பு போன்ற மிக முக்கியமான சில சவால்களை எதிர்கொள்ளும் இந்த முயற்சி தொலை நோக்கில் ஆழமான தாக்கத்தை உருவாக்கும்" என்றார்.


சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “தொழில்நுட்பத்தையும் திறமையையும் ஒன்றிணைத்து நீடித்த போக்குவரத்தை இயக்குவதற்கான மையத்தை ஃபெட்எக்ஸ் உடன் இணைந்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். செயல்பாட்டு ஆராய்ச்சி, நெட்வொர்க் திட்டமிடல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, செயல்திறன் அதிகரிப்பு, உத்தி சார்ந்த திட்டமிடல் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் நீடித்த தளவாடப் போக்குவரத்தை மேலும் விரிவுபடுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.




மேலும் வாசிக்க..


Corning: தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடியில் கொரில்லா க்ளாஸ் உற்பத்தி ஆலை - எங்கு தெரியுமா?


HBD Rajinikanth: அன்பிற்கினிய சூப்பர் ஸ்டாருக்கு.. முதலமைச்சர் ஸ்டாலின் முதல் தனுஷ் வரை.. ரஜினிக்கு குவியும் வாழ்த்துகள்..