கோலிவுட் தாண்டி உலகம் முழுவதும் தனது தனித்துவமான ஸ்டைலுக்கும் நடிப்புக்கும் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ள இந்திய சூப்பர் நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth).


இந்திய சினிமா உலகில் 47 ஆண்டுகளைக் கடந்து, தனக்கென தனி பாதை அமைத்து, மூன்று தலைமுறை ரசிகர்கள் தொடர்ந்து கவர்ந்து என்றென்றும் சூப்பர் ஸ்டாராய் கோலோச்சிக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், இன்று தன் 73ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.


இந்திய சினிமாவின் அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.


அதன்படி முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய பதிவில், “அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த்
 அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப் படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.




நடிகர் கமல்ஹாசன் தன் உற்ற நண்பரான கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 






நடிகர் தனுஷ் “பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா” என வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.






நடிகர் ராகவா லாரன்ஸ், “பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா. உங்கள் உடல்நலனுக்காக ராகவேந்திரர் சுவாமியை நான் வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும். குருவே சரணம்” எனப் பதிவிட்டுள்ளார்.






பிரபல கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவர் என ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன் ஸ்டோரியில் பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.




“பேரரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா” என இசையமைப்பாளர் அனிருத் பதிவிட்டுள்ளார்.


 






“பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா.. நீங்க தான் என் குரு.. நீங்க தான் என் சந்தோஷம்.. நீங்க தான் எல்லாமே.. எங்களை எப்போதும் கவர்ந்து கொண்டே இருங்கள்” என இயக்குநர் தேசிங்கு பெரியசாமி பதிவிட்டுள்ளார்.


 






பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து தன் பதிவில், “தங்களுக்குத் தேவையான ஏதோ ஒரு மின்னூட்டம் உங்களிடம் உள்ளதாக மக்கள் நம்புகிறார்கள். அதைமிக்க விலைகொடுத்துத்தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கலை என்ற பிம்பத்தைவிட உங்கள் நிஜவாழ்க்கையின் நேர்மைதான் என்னை வசீகரிக்கிறது. எதையும் மறைத்ததில்லை, என்னிடம் நீங்கள் பலம், பலவீனம், பணம், பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்.


அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் உடல் மனம் வயது கருதி நீங்கள் எடுத்த அரசியல் முடிவு
உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கையெல்லாம் வழிவகுக்கும். வாழ்த்துகிறேன் விரும்பும்வரை வாழ்க!” எனப் பதிவிட்டுள்ளார்.


 






மேலும் நெட்டிசன்கள், ரசிகர்கள் எனப் பலரும் தொடர்ந்து ரஜினிகாந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.