கார்னிங் (Corning) நிறுவனம் தமிழ்நாட்டில் கொரில்லா க்ளாஸ் உற்பத்தி (Gorilla Glass) தொழிற்சாலையை ரூ.1000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது.


அமெரிக்க கொரில்லா க்ளாஸ் தயாரிப்பு நிறுவனமான கார்னிங் (Corning) Apple நிறுவனத்திற்கு க்ளாஸ் விநியோகம் செய்து வருகிறது. ஐபோனில் ஸ்க்ரீன் ப்ரோடக்டிங் கண்ணாடி இந்த நிறுவனத்தினுடையது.  இந்த நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை அருகேயுள்ள திருபெரும்புத்தூர் பகுதியில் உள்ள பிள்ளைப்பாக்கத்தில் 25 ஏக்கர்  பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக ஆங்கில நாளிதழின் ஆன்லைன் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. Apple நிறுவனத்தின் விநியோகஸ்தராக உள்ள ஒரு பிரபல நிறுவனம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பொருளாதார மற்றும் பல்வேறு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு தொழில்நுட்ப துறையில் பல்வேறு முன்னணி உற்பத்தி நிறுவனங்களை கொண்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய இடமாக உள்ளது. Apple வென்டார் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய ஆலையை தொடங்குவது ஸ்மாட்ஃபோன்களில் விலை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 


கார்னிங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஆலையை தொடங்க வேண்டுன் என்று முடிவெடுத்தபோது அவர்கள் தேர்வு செய்த இடம் தெலங்கானா. ஆனால், இறுதியாக தமிழ்நாட்டில் தொழிற்சாலையை நிறுவ முடிவெடுத்துள்ளது. ஏனெனில் தமிழ்நாடு எலக்ட்ரானிக். தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு பெரும் வாய்பாக உள்ளது. இன்னொன்று ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் போன்ற பிற ஆப்பிள் சப்ளையர் நிறுவனங்களும் அருகில் இருப்பதால், அந்த நிறுவனம் தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளது.


இதன் மூலம் சுமார் 300 பேர் நேரடி வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்பது கூடுதலான மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். மேலும், தேவையெனில் இந்த உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யவும் திட்டம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் மென்மேலும் விரிவடைவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.


உலகளவிலான மற்றும் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்கிற வகையில் ஆண்டுக்கு 50 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் திறனுடன்  இந்தியா உள்ள நிலையில், கார்னிங் நிறுவனம் தமிழ்நாட்டிற்குள் அடியெடுத்து வைத்திருப்பது பல்வேறு பயன்களை தரும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் அடுத்தாண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகும்.


2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இது இன்னும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.