Family Card: குடும்ப அட்டையுடன் வங்கி எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயமா...? ராதாகிருஷ்ணன் விளக்கம்...!

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் பேட்டி

Continues below advertisement
தமிழக அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒருநாள் பயணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுதுறை சார்ந்த பணிகளை ஆய்வு செய்ய வருகை புரிந்தார். உலக ஊனமுற்றோர் தினத்தை ஒட்டி கூட்டுறவுத்துறை வங்கிகள் மூலம் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கிய, முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓரிக்கை டெம்பிள் சிட்டி பகுதியில் செயல்படும் முன்மாதிரி நியாய விலைக் கடையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு அங்கு முட்டை தூக்கும் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
 

பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் ஆய்வு மேற்கொண்டு கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூட்டுறவு சங்கங்களில் இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

 
"தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதார்கள் உள்ளனர். அதில் 14.86 லட்சம் குடும்பத்தாரர்கள் மட்டுமே வங்கி கணக்கு எண்,ஆதார் எண் இணைக்காமல் உள்ளது. 95 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் இணைக்கும் பணி நடைபெறுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை" என கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
 

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

Continues below advertisement

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement