சென்னையில் பெர்னாண்டோ அலோன்சோ 


Cognizant மற்றும் Aston Martin Aramco Formula One குழுவானது நேற்றைய தினம் , சென்னையில் உள்ள Cognizant நிறுவனத்தின் MEPZ வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் தங்களின் மூன்றாண்டுகளின் கூட்டாளித்துவத்தின் வெற்றியைக் கொண்டாடியது. ஆஸ்டன் மார்ட்டின் அராம்கோ கார் ரேசரும் இரண்டு முறை ஃபார்முலா ஒன் உலக சாம்பியனுமான  ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெர்னாண்டோ அலோன்சோ காக்னிசண்ட், தலைமைக் குழு நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கூட்டாளிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பெர்னாண்டோ அலோன்சோ வந்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தை ஏற்படுத்தியது


தொழில்நுட்ப சேவை:


கூட்டாண்மையானது 2021 இல் தொடங்கியது முதல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான காக்னிசண்ட், Aston Martin F1 குழுவிற்குள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் தரவு, பகுப்பாய்வு மற்றும் இயந்திர கற்றல் நிபுணத்துவத்தின் மூலம், காக்னிசன்ட் குழுவின் தினசரி செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளது என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது


Cognizant  தொழில்நுட்பத்தால், மில்லியன் கணக்கான ரசிகர்களை ஃபார்முலா ஒன் ரேஸ் உலகிற்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது என்றும் சிலர் தெரிவித்தனர். 


அப்போது அலோன்சோ பேசுகையில், வணக்கம் சென்னை என தமிழ் வார்த்தையை உச்சரித்ததும் , அவரது ரசிகர்கள் உற்சாகமாக சத்தமிட்டனர். இதையடுத்து அவர் பேசுகையில், மூன்று ஆண்டுகளாக, நாங்கள் காக்னிசென்ட் உடன் கூட்டாண்மையில் உள்ளோம், தொழில்நுட்பத்தில் அதன் முன்னேற்றங்கள் மற்றும் அணிக்கான ஆதரவு மற்றும் எங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது. மேலும்,  எங்களது ரேஸ் போட்டிகளின் போதும் முடிவுகளை அறிவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அலோன்சோ கூறினார்.


இதையடுத்து, அவரது ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்தும் , ஆட்டோகிராப்பும் வாங்கினர்.