சென்னை பல்லாவரத்தில் உள்ள ST கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.நகர் பசுல்லா சாலையிலுள்ள நரேஷ் என்பவரின் சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் நரேஷ்.
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனிக்கு சொந்தமான எஸ்.டி கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. சென்னை அடுத்து பல்லாவரம் எஸ்டி கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து பல்லாவரம் அருகில் உள்ள பம்மல் பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ரியாஸ் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்