தென் மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு சென்னையில் நுழைவு வாயிலாக இருக்கும் செங்கல்பட்டில் மற்றும் தாம்பரத்தில் இருந்து நாள்தோறும் 75-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை வரை சென்று வரும். சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மின்சார ரயிலில் பயன்படுத்தி விரைவாக தங்களுடைய பணிகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவார்கள்.


காட்டாங்கொளத்தூா்-கூடுவாஞ்சேரி  ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் 8  நாட்கள் மாற்றம்  செய்யப்படவுள்ளது. பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், சென்னை - தாம்பரம் ரயில்வே பாதையில் ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அதற்கேற்றார்போல் பயணிகள் தங்களுடைய பயணத்தை திட்டமிட மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, காட்டாங்குளத்தூர் - கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே, வரும் 15, 17, 18, 20, 22, 24, 25, 27-ம் தேதிகளில் காலை 11.25 மணி முதல் மதியம் 1.25 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் மேற்கண்ட நாட்களில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 10.56 மணி ரயில், கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 10.10 மணி ரயில் (18, 25-ம் தேதிகள் தவிர) கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11.50 மணி ரயில் வரும் 18, 25-ம் தேதிகளில் மட்டும் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 12.20 மணி ரயில் மேற்கண்ட நாட்களில் கூடுவாஞ்சேரியில் இருந்தும், காலை 11.30 மணி ரயில் (18, 25-ம் தேதிகள் தவிர) மற்ற நாட்களில் கூடுவாஞ்சேரியில் இருந்தும் இயக்கப்படும். செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 1 மணி ரயில் வரும் 18, 25-ம் தேதிகளில் மட்டும் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும்.


முழு சேவை ரத்து


திருமால்பூர் - சென்னை கடற்கரை காலை 10.40 மணி ரயில் வரும் 15, 17, 20, 22, 24, 27-ம் தேதிகளில் முழு சேவையும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக, மேற்கண்ட நாட்களில் மதியம் 12 மணிக்கு திருமால்பூர் - சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X