சமூக ஊடகங்களின் மூலம் சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல், யூடியூப் சேனல் உருவாக்குதல் குறித்த மூன்று நாள் பயிற்சி வகுப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி


எப்போது, எங்கே நடைபெறுகிறது?


தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் ‘ யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல்’  குறித்த பயிற்சி  நடைபெற உள்ளது. 09.01.2024 முதல் 11.01.2024 வரை  காலை 10.00 முதல்  மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.


முக்கியத்துவம் என்ன?


இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது,  சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு - ஆன்லைன் மார்க்கெட்டிங் - டொமைன் பெயர் & ஹோஸ்டிங் - இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிப்பது எப்படி?


இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in - என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.


தொடர்புக்கு


தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,


 சிட்கோ தொழிற்பேட்டை,


EDII அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,


சென்னை 600 032.


044-22252081/22252082, 8668102600 / 86681 00181