சென்னையில் ரயில் பேருந்துகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் வசதி 2024ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
சென்னையில் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டுமுறை (இ-டிக்கெட்) அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான தொடக்க முயற்சியாக 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளனர். இதன் மூலம் பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு பயணித்தால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை போக்குவரத்துக் குழுமத்தின் சார்பில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்காக தனியாக செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே முதல் முதல் முறையாக மூன்று போக்குவரத்து முறைகளிலும் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கும் முறையை சென்னையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான டெண்டரை தனியாருக்கு விடவும் திட்டமிடப்பட்டுள்ளது.