சென்னை மாநகருக்கு உள்ளே நீங்கள் பயணம் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் இ- பாஸ் பெற்றிருக்க வேண்டும். இந்த இ- பாஸ் பெறுவது குறித்து மக்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஆகவே மக்களுக்கு எழும் சில பொதுவான சந்தேகங்கள் மற்றும் அதற்கான பதில்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  இனி இபாஸ் தேவையில்லை என தவறான புரிதலில் சென்னையை வலம் வர நினைத்தால், அது உங்களுக்கு அபராதத்தை பெற்றுத் தரலாம். அசட்டையாக ஊர் சுற்றி சில நூறுகளை இழக்க வேண்டாம். உங்களுக்கு இபாஸ் பெறுவதில் இருக்கும் சந்தேகங்களை தீர்க்க தான் இந்த பதிவு.
   
கேள்வி : சென்னையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் உள்ள வங்கிக்கு செல்ல இ-பாஸ் பெறவேண்டுமா?


பதில் : தற்போதைக்கு சென்னைக்கு உள்ளே எங்கு பயணம் செய்ய வேண்டுமென்றாலும் கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். வங்கி வேலைகளுக்கு என்று தனியாக இ-பாஸ் பெறமுடியாது. ஆகையால் தளர்வுகள் அறிவிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.  


கேள்வி : சென்னையில் சில நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த பணியாளர்கள் தங்களது நிறுவனங்களுக்கு சென்று வர காலவரையறை உள்ளதா?


பதில் : பணியாளர்கள் தங்களது நிறுவனங்களுக்கு சென்று வர காலவரையறை எதுவும் அரசால் அறிவிக்கப்படவில்லை.    


கேள்வி : எனது மகன் அல்லது மகளின் கல்லூரி சேர்க்கைக்காக என்னால் கல்லுரிக்கு செல்ல முடியுமா? 


பதில் : லாக் டான் காலத்தில் பெற்றோர்களின் சிரமத்தை குறைக்க கல்லூரிகள் ஆன்லைன் சேர்க்கையை அறிமுகம் செய்துள்ளது. பெற்றோர்கள் அந்த ஆன்லைன் சேவையை பயன்படுத்தலாம். 


கேள்வி : சென்னையில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் நான் பணிபுரிகிறேன். சென்னையில் வேறு பகுதியில் வசிக்கும் என்னால் என் பணியை தொடர முடியுமா?.


பதில் : தற்போது முதியோர் பராமரிப்பிற்கென்று தனியாக இ-பாஸ் பெற முடியாது.


கேள்வி : மாணவர்கள் சேர்க்கைக்காக கல்வி நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. அப்படி அனுமதித்துள்ள நிலையில், சில கல்வி நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை கல்வி நிலையங்களுக்கு வர அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து விளக்கம் வேண்டும்.  


பதில் : கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கைக்காக செயல்பட அரசு அனுமதித்துள்ளது. ஆகையால் அதற்கு தேவைப்படும் பணியாளர்களை கல்வி நிலையங்களுக்கு அழைக்கலாம்.


கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு... ஆச்சரியத்தில் மக்கள்!


கேள்வி : சென்னையில் வேறு பகுதியில் உள்ள எனது வயது முதிர்ந்த பெற்றோரை பார்த்துக்கொள்ள என்னால் செல்லமுடியுமா?


பதில் : அவசர மருத்துவ தேவை இ-பாஸ் பெற்று உங்களால் பயணிக்க முடியும்.