சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையில் மாற்றம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


சென்னை மெட்ரோ: 


சென்னை மக்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து விரைவான பயணம் மேற்க்கொள்ள சென்னை மெட்ரோ ரயில்களின் சேவை பெரிதும் உதவுகிறது.இதனால் மெட்ரோ ரயில்களில் எப்போதுமே கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் இந்த மெட்ரோ சேவையை தினமும் லட்சக்கணக்காம மக்கள் பயன்படுத்தியும் வருகின்றனர்.


தொழில்நுட்ப கோளாறு: 


இந்த நிலையில் தான் நேற்றிரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே தொழில்நுட்ப கோளாறு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில்கள் நேற்றிரவு 20 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டுள்ளது. 






இந்த கோளாரனது காலை வரையிலும் சரி செய்ய முடியவில்லை, இதன் காரணமாக  மெட்ரொ ரயில்கள் ஒரு வழிப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மெட்ரோ ரயில் தெரிவித்துள்ளதாவது, ”தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் டெப்போவிற்கு ப்ளூ லைனில் நேரடி ரயில்கள் 18 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரை ப்ளூ லைனில் 6 நிமிட இடைவெளியில் இயங்குகிறது. டோல்கேட் முதல் விம்கோ நகர் டிப்போ வரை 6 நிமிட இடைவெளியில் இயங்குகிறது.


கிரீன் லைன்: புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து விமான நிலையம் வரை 7 நிமிட இடைவெளியில் இயங்குகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், என்று மெட்ரோ ரயில் நிர்வாகம்  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






கோளாரை சரி செய்யும் ஊழியர்கள்:


இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது, இதனால் பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. 8 மணி நேரத்துக்கும் மேலாக நிலவும் இந்த கோளாறை செய்யும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.