டெல்லி உள்ளிட்ட, வட மாநிலங்களில், தொடர்ந்து நிலவி வரும் கடுமையான பனிமூட்டம், மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில், இன்று 4 புறப்பாடு விமானங்கள்,7 வருகை விமானங்கள், மொத்தம் 11 விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

தொடர்ந்து ரத்தாகும் விமானங்கள்

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில், கடந்த சில தினங்களாக, கடுமையான பனிமூட்டமும், மோசமான வானிலை, காற்று மாசு போன்றவைகளால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி செல்லும் விமானங்கள், டெல்லியில் சென்று தரை இறங்க முடியாமல், வேறு விமான நிலையங்களில் சென்று தரை இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

 

Continues below advertisement

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லும் விமான சேவைகள், கடந்த சில தினங்களாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னையில் பனி மூட்டம் காரணமாகவும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று 7 விமானங்கள் ரத்து

அதை போல் இன்று சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, காசியாபாத் ஆகிய இடங்களுக்கு செல்லும் நான்கு விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைப்போல் டெல்லி, ஜெய்ப்பூர், பாட்னா, புனே, கொல்கத்தா, இந்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, சென்னை வரவேண்டிய 7 விமானங்கள் இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில், 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்தாகி வருவதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.