சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Continues below advertisement

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் ( வயது 53 ) இவர் கடந்த 2021 - ம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து மாதவரம் மகளிர் போலீசார் மகாலிங்கத்தை கைது செய்தனர்.

எல்லை பிரச்னை காரணமாக, செங்குன்றம் அனைத்து மகளிர் போலீசாரிடம் மாற்றப்பட்டு இவ்வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், மகாலிங்கம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

Continues below advertisement

இதையடுத்து மகாலிங்கத்திற்கு 10 ஆண்டு சிறையும் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.

G - Pay மூலம் பணம் அனுப்பியதாக ஏமாற்ற முயன்ற இளைஞர் !! தட்டி கேட்ட போலீஸ்காரரை தாக்கிய இளைஞர்

சென்னை ஈக்காட்டுதாங்கல் அம்பாள் நகரைச் சேர்ந்தவர் மரியா ஜகன் ( வயது 30 ) பரங்கி மலை காவல் நிலைய போலீஸ்காரர். இவர் அமைந்தகரை -  பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தன் அண்ணனின் டீக்கடையில் நின்றிருந்தார்

அப்போது மதுபோதையில் வந்த நபர், ஆன்லைன் பணப்பரிமாற்ற மொபைல் போன் செயலியான ஜிபே மூலம் 500 ரூபாய் அனுப்புவதாகவும், பணத்தை தன் கையிலும் தரும் படியும் கேட்டுள்ளார்.

பின், பணம் செலுத்தியதற்கான குறுந்தகவல் ஒன்றை காட்டி விட்டு பணத்தை கேட்டுள்ளார். அதற்கு மரியா ஜகன் பணம் ஏதும் வரவில்லை எனக்கூறி, திட்டி அனுப்பினார்.

அதே நபர், பக்கத்தில் உள்ள பஞ்சர் கடையிலும் இதே போல் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட முயன்றுள்ளார். இதை பார்த்த மரியா ஜகன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.

அப்போது ரோந்து வாகனத்தில் வந்த போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது போது, தான் வழக்கறிஞர் எனக் கூறி, ரோந்து வாகனத்தை சேதப்படுத்தியும், போலீசாரை தாக்கியும் அட்டகாசம் செய்துள்ளார்.

போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த ராகவேந்திரன் ( வயது 24 ) என்பதும், வழக்கறிஞர் என சொல்லி ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.