திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்

Continues below advertisement


நாம் தமிழர் கட்சியில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொறுப்புகளில் இருந்த நபர்கள், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின் முன்னிலையில் 2 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். 


நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி:


வெங்காயம் பட இயக்குனர் சீமான் பிரபாகரனுடன் இருப்பது போன்ற படத்தை போட்டோ சாப் மூலம் தயாரிக்கபட்டதாக தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் என்ற நபர் அந்த படத்தை அனுப்பி வைத்தார். அந்த படத்தின் டிவிடியை ஓடி வந்து வாங்கியவன் நான் தான் அதில் பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற படம் இருந்தது.


படத்தை எடிட் செய்தவர் இதை ஒப்பு கொண்டு இருக்கிறார். அந்த படத்தை நான் வாங்கியதால் அதை விமர்சிக்கிறேன். சீமானால் இதை மறுக்க முடியுமா ?


தமிழ்நாட்டில் பெரியாருக்கு எதிரான கருத்தியல் பேசினால் கருத்தியலை கருத்தியலால் எதிர்கொள்வோம். ஆனால் அவதூறுகளை பேசினால் முட்டுக்கு முட்டு என்ற நிலையை எடுப்பேன். இன்னும் ஏராளமான இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து திமுகவில் இணைய உள்ளனர் என்று கூறினார்.