1. காஞ்சிபுரம் பாலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு 1.60 லட்சம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருப்பதாக தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
2. காஞ்சிபுரத்தில் காமராஜா் வீதி, காந்தி ரோடு, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியாா் நகா், தேனம்பாக்கம், ஐயம்பேட்டை, ஓரிக்கை தொழிற்பேட்டை, ஆட்சியா் அலுவலகம், ஓரிக்கை, பாலாறு தலைமை நீரேற்றுப் பகுதி மற்றும் ஓரிக்கை துணை மின் நிலையத்தைச் சோந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிப்பு
3. கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
4. காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியா்கள் காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் உண்ணாவிரதம்
5. கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில், நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
6. வாலாஜாபாத் ரவுண்டானா மற்றும் பஸ் நிலையத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக, செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள்; தாம்பரத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் செல்லும் வாகனங்களில், தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
7. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 818 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 818 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 85 ஏரிகள் 70%-100% , 3 ஏரிகள் 50% - 75% , 3 ஏரிகள் 25% - 50% நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஷ்வர்நாத் பண்டாரி திங்கட்கிழமை பதவி ஏற்கிறார்.
9. ஆன்லைனில் பருவத் தேர்வு நடத்தக் கோரி கல்லூரி மாணவர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக வரக்கூடிய தகவலை நம்ப வேண்டாம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
10. பூண்டி சத்யமூர்த்தி நீர்தேக்கத்தில் வினாடிக்கு 30000 கன அடியாக திறக்கப்பட்ட உபரிநீர் தற்போது 23500 கன அடியாக குறைப்பு இந்த ஏரிக்கு நீர்வரத்து 24000கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. 35 அடியில் தற்போது 34.41 அடி நீர் இருப்பு உள்ளது.