மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக, சென்னையில் இன்று திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டமானது நிறைவு பெற்றது.
திமுக உண்ணாவிரத போராட்டம்:
மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சட்டத்துறை சார்பில் சென்னை, எழும்பூரில் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது.
இப்போராட்டத்தில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சிபிஐ மாநிலச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, போராட்டத்தில் 3 குற்றவியல் சட்டங்கள் குறித்தும், பாஜக அரசு குறித்தும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
அமைச்சர் துரைமுருகன்:
இச்சட்டங்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களும், இந்த நாட்டை சர்வாதிகாரத் தன்மையை நோக்கி நகர்த்தவே வழிவகுக்கும் என திமுக சட்டத்துறை சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
எம்.பி வில்சன்:
இதையடுத்து பேசிய எம்.பி வில்சன், மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என திமுக எம்.பி வில்சன் தெரிவித்தார்.
இவர்களை தொடர்ந்து, பேசிய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில் மத்திய அரசு கொண்டுவந்த 3 சட்டங்களும் ஆட்சி மாற காரணமாக இருக்கும் என பேசினார்.