ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை இன்று ( அக்டோபர் 30-ம் தேதி ) நடைபெற்று வருகிறது


தேவர் ஜெயந்தி:


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த தேதியும், இறந்த தேதியும் அக்டோபர் 30-ஆம் தேதியாகும். எனவே, சுதந்திர போராட்டம் உள்ளிட்ட சேவைகளை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


தேவரின் ஆன்மீக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்நிலையில், சென்னையில் உள்ள நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.


ஆளுநர்


சென்னை கிண்டி ராஜ்பவனில், முத்துராமலிங்க தேவரின் திரு உருவ படத்திற்கு, தமிழ்நாடு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முத்துராமலிங்க தேவரின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர், தொலைநோக்கு தேசியவாதி, ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவரது வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்" என ஆளுநர் தெரிவித்துள்ளார்






திமுக சார்பில் மரியாதை:


திமுக சார்பில் எம்.பி., டி.ஆர்.பாலு, அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர், சென்னையில் உள்ள நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, முத்துராமலிங்க தேவர் தனது சொந்த நிலத்தையை தானமாக கொடுத்தவர், தேவரின் வரலாற்றை பலரும் மறந்து விட்டார்கள், அப்படி மறப்பது தவறு என தெரிவித்தார்.


மதுரை விமான நிலையத்துக்கு, முத்துராமலிங்க தேவரின் பெயரை வைப்பது தொடர்பான கோரிக்கை தொடர்பாக கேள்விக்கு, சரியான நேரத்தில் அரசு முடிவு எடுக்கும், நான் பாராளுமன்ற உறுப்பினர்,பாராளுமன்றம் குறித்து கேட்டால் சொல்லலாம் என தெரிவித்தார்.


இபிஎஸ்


சென்னையில் உள்ள நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னா அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிடோர் அதிமுக சார்பில் மலர் தூவி அணிவித்து மரியாதை செலுத்தினர்.


சீமான்:






சென்னையில் உள்ள நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.