காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடைகளை அலைமோதும் மது குடிப்போர்
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். அமாவாசையின்போது, கடவுள்களை வழிபட்டு, மக்கள் ஒருவருக்கொருவர் வீட்டுக்கு சென்று பலகாரங்களை பரிமாறிக் கொள்கின்றன. புதிய ஆடைகளை அணிந்துகொண்டு வீட்டிற்குள் தீபங்களும், வீட்டிற்கு வெளியே விளக்குகளை ஏற்றியும் தீபாவளியை கொண்டாடுகின்றன.
களைகட்டும் தீபாவளி:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நவம்பர் வரை தீபாவளிக்கான தேதிகள் மாறுபடும். இந்தநிலையில், இன்று நாடுமுழுவதும் நவம்பர் 12-ஆம் தேதியான இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்தாண்டு புதிதாக திருமணமானவர்கள் தங்களது மாமியார் வீட்டில் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தீபாவளி நாளான இன்று காலை 6 மணிமுதல் 7 மணிவரையிலும், இரவு 7 மணிமுதல் 8 மணிவரையிலுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பூ விலை உயர்வு..
தீபாவளி பண்டிகையின் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்றையை தினம் தீபாவளி வருவதனால் புதுமணத் தம்பதிகள் மற்றும் இல்லங்களில் தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் இன்று பூக்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் மல்லிகை பூ மற்றும் கனகாம் பூ கிலோ நேற்று 600 விற்பனை செய்த நிலையில் இன்று ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாமந்திப்பூ ரோஜா பூ கிலோ 300 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. மேலும் தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்வு அதிகமாகி வருகிறது.
தீபாவளி பண்டிகை
தமிழக அரசு நடத்தும் டாஸ்மார்க் மதுபான கடைகளில் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் இயல்பை விட பல மடங்கு விற்பனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து கடவுளை வழிபட்டு, பட்டாசுகள் வெடித்தும் மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
முண்டியடித்து மது வாங்கிச் சென்றனர்
மறுபுறம் காலை முதல் காத்திருந்த மது குடிப்போர் 12:00 மணி அளவில் திறக்கப்பட்ட மதுபான கடையில் நீண்ட வரிசையில் காத்திருந்து தற்பொழுது மதுக்களை வாங்கி செல்கின்றனர். மதுபானம் மற்றும் பீர் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். இளைஞர்கள் பெரும்பாலும் பீர் வகைகளை வாங்கி செல்கின்றனர். அதேபோன்று காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மது பிரியர்கள் காத்திருந்து முண்டியடித்து, மது வாங்கிச் சென்றனர்.