Diwali 2022: சென்னை தீவுத்திடலில் நாளை மறுநாள் முதல் பட்டாசு விற்பனை தொடங்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் நாளை மறுநாள் முதல் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கப்படவுள்ளது.
நாளை மறுநாள் பட்டாசு விற்பனை
சென்னை: சென்னை தீவுத்திடலில் நாளை மறுநாள் முதல் அதாவது அக்டோபர் 17ஆம் தேதி முதல் பட்டாசு விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம், இந்த இடத்தில் 55 பட்டாசுகள் அமைப்பதற்கான டெண்டரை சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. அதன்படி இந்தாண்டு 55 கடைகளை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னேற்பாடுகள் தீவிரம்
சென்னை திவுத்திடலில் நாளை மறுநாள் பட்டாசு விற்பனை தொடங்க உள்ள நிலையில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகளில் வியாபாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்த கடைகள் ஒன்றிலிருந்து மற்றொன்று 3 மீ தொலைவில் அமைக்கப்படுகின்றன. மேலும் இந்த கடைகள் 250 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடைகளுக்கு அருகே பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் பட்டாசுகளை வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் வருவார்கள். அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் லாரிகள், விபத்து தடுப்புக் குழுக்கள், அனைத்து கடைகளுக்கும் காப்பீடு, ஆம்புலன்ஸ் வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரமாக வெளியே தனிப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டாசு வெடிக்கும் நேரம்
தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவி எண்கள்
தீபாவளி நாள் அன்று தீ விபத்து மற்றும் பட்டாசுகள் மூலம் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் காவல்துறை அல்லது தீயணைப்புத்துறை அவசர உதவி எண்:112 மற்றும் மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்: 108 ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மேலும் தமிழக அரசின் வழிகாட்டுதல்படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான கால அளவுகள், விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி வரும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.