காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச் செல்வி மோகன்  தகவல். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) 


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) என்பது கிராமப்புற வறுமையை போக்கவும் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய திட்டமாகும். காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகு. குன்றத்தூர்-2. உத்திரமேரூர்-2. வாலாஜாபாத்-2. திருப்பெரும்புதூர்-1 ஆகிய வட்டாரங்களில் காலிப்பணியிடமாக உள்ள 7 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (BC) பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்  டுகின்றன.


வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கல்வித்தகுதி விவரம்:


கல்வித்தகுதி : தாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும்.


வயது : 28  வயதிற்குள் இருக்க வேண்டும் 


முன் அனுபவம் :  குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று பணியாற்றி இருக்க வேண்டும்.


இருப்பிடம் :  சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.


 பாலினம் : பெண்


 விண்ணப்பம்  அனுப்ப வேண்டிய கடைசி நாள்.  11.09.2023


 விண்ணப்பம் அனுப்ப  வேண்டிய முகவரி -  இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்


                                                                                            தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்  ,


                                                                                             மகளிர் திட்டம்,


                                                                                             காஞ்சிபுரம் மாவட்டம்.


எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,   மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) அலுவலகம்,  வட்டார இயக்க மேலாண்மை அலகு. குன்றத்தூர்-2. உத்திரமேரூர்-2. வாலாஜாபாத்-2. திருப்பெரும்புதூர்-1 ஆகிய வட்டாரங்களில் காலிப்பணியிடமாக உள்ள 7 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 11.09.2023-க்குள் அனுப்பி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்  கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்.