அன்புமணி ராமதாஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற புகைப்படமும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோவிலுக்கு சென்ற புகைப்படமும், தற்போது சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன.

 

திருப்பதியில் அன்புமணி ராமதாஸ்

 

தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக ராமதாஸ் இருந்து வருகிறார். அவரது மகன் அன்புமணி ராமதாஸ் தற்பொழுது பாமகவின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அதேபோன்று அவரது மனைவி சௌமியா அன்புமணி ராமதாஸ் பசுமை தாயகம் என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். 

 


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் அன்புமணி ராமதாஸ் மற்றும் சுவாமி அன்புமணி


 

 

இந்நிலையில், கடந்த 28- ஆம் தேதி, அன்புமணி ராமதாஸ் தனது திருமண நாளன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று, சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார். திருப்பதி சென்ற பொழுது, தாய் சரஸ்வதி, தனது மகள் மருமகன், சகோதரி கவிதா, பேரக் குழந்தைகளுடன் தரிசனம் மேற்கொண்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் பரவி இருந்தது. 

 


சிறப்பு வழிபாடு மேற்கொள்ளும் அன்புமணி ராமதாசின் குடும்பத்தினர்


 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வந்த அன்புமணி ராமதாஸ்

 

இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு, திடீரென பாமக அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் வருகை புரிந்து 'ஆதிபரா சக்தி' அன்னையை வழிபட்டார். இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி கோவில் , ஆன்மீக குரு பங்காரு அடிகளாரை சந்தித்த அன்புமணி ராமதாஸ் அவரிடம் ஆசிகளை பெற்றார்.

 


பங்காரு அடிகளார் உடன் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினர்


 

முன்னதாக அன்புமணியின் வருகை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள், மற்றும் சிறப்பு பூஜைக்கு , ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உடன் அன்புமணி ராமதாஸின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர்  கலந்து கொண்டனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பக்தர்கள் அன்புமணியை கண்டு ஆச்சரியத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 


அன்பு மணியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பக்தர்கள்


 

அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ராவின் திருமண நாளை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு மேற்கொண்டார் என கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் சௌமியா அன்புமணி, சரஸ்வதி ராமதாஸ் உள்ளிட்டோர் ஆடிப் பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.