கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞானசபைக்கு ஜோதி தரிசனத்திற்காக தரிசனத்திற்காக பூச நட்சத்திரத்தன்று ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கடலூரில் கடந்த மூன்று மாதத்தில் 60,760 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 525 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது சுமார் 850 க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர் இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 750 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 


 

உயிரிழப்புகளும் சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்ய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாத பூச ஜோதி தரிசனத்திற்கு பொதுமக்கள் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

 

இது குறித்து வள்ளலார் தெய்வநிலைய செயல் அலுவலர் சரவணன் கூறியதாவது,

 

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அறிவுரையின்பேரில் நாளை இரவு நடைபெறும் மாத பூச ஜோதி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஜோதி தரிசனத்தை இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை வள்ளலார் தெய்வ நிலைய இணைய தளத்தில் நேரலையாக காணலாம். பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே மாத பூச ஜோதி தரிசனம் செய்யலம் என கூறினார்