டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

 

சென்னை அடுத்த செம்மஞ்சேரி காவல் நிலையதில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் C. சைலேந்திரபாபு தீடீர் ,ஆய்வு மேற்கொண்ட டிஜிபி காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடுகள், குற்றம் சம்மந்தப்பட்ட பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் சமீபத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் என்ன மாதிரியான குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளீர்கள் என்றெல்லாம், காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரித்தார். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார்.



 

5000 பரிசு..

 

மேலும், அங்கு சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரணை செய்தார். அதன் பின்னர், காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து காவல் நிலையத்தில் பதிவேடுகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டிருந்ததால் காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு ரூபாய் 5,000 வெகுமதி வழங்கினார். 

 



குழு புகைப்படம்

 

இதையடுத்து, அங்குள்ள அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த ஆய்வின்போது பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா, செம்மஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ரியாசுதீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

 



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்