காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சின்னம் இல்லாமல், சுயேட்சை சின்னத்தில் போட்டியிட தேர்தல் நடத்தப்படுகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெற உள்ளது.



 

காஞ்சிபுரம் மாவட்டம்

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2321 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், வாலாஜாபாத் என 5 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி  ஒன்றிய வார்டு உறுப்பினர் - 98, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 11 ஆகிய இடங்களுக்காக தேர்தல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஒன்றியங்களில் அக்டோபர் 6-ஆம் தேதி அன்று முதற்கட்ட தேர்தலும், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

 

திராவிட முன்னேற்றக் கழகம்

 

இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஒரு அணியாக போட்டியிடுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



 

ஒன்றியம் வாரியாக கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு விவரம் பின் வருமாறு :

 

காஞ்சிபுரம் மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 மாவட்ட வார்டு உறுப்பினர்கள் இடங்களில், திமுக 8 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு மூன்று இடத்தை ஒதுக்கி உள்ளது.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது. வார்டு எண் - 2 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது விசிகவிற்கு. வார்டு எண் 2 எஸ்சி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. (வாலாஜாபாத் ஒன்றியம்) . காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது. வார்டு எண் 9 ஒதுக்கப்பட்டுள்ளது. (ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம்). மதிமுகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது . வார்டு எண் 7 மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு பொதுப்பிரிவு பெண்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது. ( குன்றத்தூர் ஒன்றியம்) 

 

 

காஞ்சிபுரம் ஒன்றியம்

 

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 18 வார்டுகள் உள்ளன. அதில் திமுக  17 இடங்களில் போட்டியிடுகின்றது. கூட்டணிக் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்கி உள்ளது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்கி உள்ளது. வார்டு எண் 12 ( கீழ்கதிர்பூர் ) விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 

வாலாஜாபாத் ஒன்றியம்

 

வாலாஜாபாத் ஒன்றியத்தில் 21 இடங்கள் உள்ளன. அதில் திமுக 20 இடங்களில் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 12  (குன்னவாக்கம்) காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. 

 

உத்திரமேரூர் ஒன்றியம்

 

உத்திரமேரூர் ஒன்றியத்தில் 22 இடங்கள் உள்ளன. அவற்றில் திமுக  19 இடங்களில் போட்டியிடுகிறது . 2 இடங்கள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு இடம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

 

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் -2 காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது (சிபிஐஎம்). வார்டு எண் 14  (பழவேரி ) ஒதுக்கப்பட்டுள்ளது.

 

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம்

 

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 16 இடங்கள் உள்ளன. அதில் திமுக 14 இடங்களில் போட்டியிடுகிறது .2 இடங்கள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களை ஒதுக்கியுள்ளது. வார்டு எண் 2 ( செங்காடு ) வார்டு எண் 11 (வடமங்கலம் ).

 

குன்றத்தூர் ஒன்றியம்

 

குன்றத்தூர் ஒன்றியத்தில் 21 இடங்கள் உள்ளன. அதில் திமுக 19 இடங்களில் போட்டியிடுகிறது. 2 இடங்கள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

 

காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டு எண் 8 (கொளப்பாக்கம்) வார்டு எண் 19 (ஒரத்தூர்)  காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒதுக்கீடு விவரம்

மாவட்ட வார்டு உறுப்பினர்கள் - 11

திமுக -  8

காங்கிரஸ் -1

விசிக -1

மதிமுக -1

 

ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் - 98

திமுக - 89

காங்கிரஸ் -6

விசிக -1

சிபிஐஎம்- 1 மேலும் ஒரு இடம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.