காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 08.12.2022, 09.12.2022 மற்றும் 10.12.2022 ஆகிய தேதிகளில் பலத்த புயல் காற்று மற்றும் கனமழை பெய்யகூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுக்களில் வருவாய், காவல், உள்ளாட்சி, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறை அலுவலர்கள் இடம் பெற்றிருப்பர். இக்குழுவினர் மழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.


21 மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம் பின்வருமாறு

வடகிழக்குபருவமழை 2022 - மண்டலகுழுக்கள்

குழுஎண்

வட்டம்

ஒதக்கீடுசெய்யப்பட்டுள்ள

பகுதிகள்

குழுதலைவர்பெயர்மற்றும்

பதவி

தொலைபேசிஎண்

1

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி

பகுதிகள் (வார்டு 1-25)

திரு.ஜி.கண்ணன்

ஆணையர் காஞ்சிபுரம் மாநகராட்சி

7397372823

2

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 26-51)

திரு.ஜி.கண்ணன்

ஆணையர், காஞ்சிபுரம் மாநகராட்சி

7397372823

3

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் மற்றும் திருப்புக்குழி குறுவட்டம்

திரு.ஏழுமலை

துணை ஆட்சியர்

சென்னை கன்னியாகுமாரி தொழிற்தட சாலை திட்டம், காஞ்சிபுரம்

9677053981

4

காஞ்சிபுரம்

பரந்தூர், சிட்டியம்பாக்கம் மற்றும் கோவிந்தவாடி குறுவட்டம்

திரு.பிரகாஷ்வேல்

மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், காஞ்சிபுரம்

7338801259

5

வாலாஜாபாத்

வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்

திருமதிபிரமிளா

நேர்முக உதவியாளர் சத்துணவு திட்டம்

7402606004

6

வாலாஜாபாத்

தென்னேரி குறுவட்டம்

திருமதி.சுமதி

தனித்துணை.ஆட்சியர் (ச.பா.தி)

9840479712

7

வாலாஜாபாத்

மாகரல் குறுவட்டம்

திருகணேசன்

நேர்முகஉதவியாளர் (வேளாண்மை)

9894215521

8

உத்திரமேரூர்

உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்

திரு.ராமசந்திரன்

உதவி.செயற்பொறியாளர்.ஊரகவளர்ச்சி துறை, காஞ்சிபுரம்

7402606000

9

உத்திரமேரூர்

திருப்புலிவனம், களியாம்பூண்டி குறுவட்டம்

திருமதி.கனிமொழி

வருவாய் கோட்டாட்சியர், காஞ்சிபுரம்

9445000413

10

உத்திரமேரூர்

சாலவாக்கம் அரும்புலியூர் மற்றும் குண்ணவாக்கம் குறுவட்டம்

திருஇளங்கோவன்

இணைஇயக்குநர் (வேளாண்மை) காஞ்சிபுரம்

9842007125

11

திருபெரும்புதூர்

திருபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்

திருமதி ஏ செல்வமதி

தனித்துணைஆட்சியர் (நி.எ) மண்ணூர்,வளர்புரம், திருபெரும்புதூர்

9842023432

12

திருபெரும்புதூர்

மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம்,

குறுவட்டம்

திருமதி,புஷ்பா,

நேர்முக,உதவியாளர் (கணக்கு)

9443395125

13

திருபெரும்புதூர்

வல்லம் மற்றும்

தண்டலம்

குறுவட்டம்

திருமதிமதுராந்தகி

சிறப்புமாவட்டவருவாயஅலுவலர், இருங்காட்டுக்கோட்டை

7305955670

14

குன்றத்தூர்

படப்பை,

குறுவட்டம்

திரு.மணிமாறன்

உதவி இயக்குநர் (பஞ்சாயத்து)

7402606005

15

குன்றத்தூர்

படப்பை குறுவட்டம்

திரு.சிவதாஸ்,

உதவி ஆணையர் (கலால்)

9360879271

16

குன்றத்தூர்

செரப்பணஞ்சேரி குறுவட்டம், மணிமங்கலம்

திருமதி.எம்.சத்தியா,

ஆய்வுக்குழுஅலுவலர்,

காஞ்சிபுரம்

9566420921

17

குன்றத்தூர்

கொளப்பாக்கம் குறுவட்டம் (மௌலிவாக்கம், கொளுத்துவாஞ்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெள்ளியகரம், பரணிப்புத்தூர், சின்னப்பணிச்சேரி, பெரியப்பணிச்சேரி, சீனிவாசபுரம்)

திரு.பாபு

மாவட்ட,வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், காஞ்சிபுரம்

9445000168

18

குன்றத்தூர்

திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் பஞ்சாயத்து

திரு.யசோதரன்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காஞ்சிபுரம் (பொ)

9952227179

19

குன்றத்தூர்

மாங்காடு குறுவட்டம் (கொல்லச்சேரி, மலையம்பாக்கம், பொழுமுனிவாக்கம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, தண்டலம், கோவூர்சிக்கராயபுரம், மூன்றாம் கட்டளை பகுதிகள்)

திருகோபி,

உதவி இயக்குநர் (தணிக்கை)

7402606006

20

குன்றத்தூர்

மாங்காடு நகராட்சி பகுதிகள்

திரு. கே.கணேஷ்

கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்)

9840281502

21

குன்றத்தூர்

குன்றத்தூர் நகராட்சி

திரு.ஜெசரவணகண்ணன்,

வருவாய் கோட்ட அலுவலர் திருபெரும்புதூர்.

9444964899

பொதுமக்களுக்கான புயல் கால அறிவுரைகள்

  • பலத்த காற்று வீசும் போது பதட்டப்படாமல் அமைதியாக, தொடர்ந்து புயல் மற்றும் மழை குறித்த எச்சரிக்கை செய்திகளை கண்காணிக்கவேண்டும்.
  • பலத்த காற்று வீசும் போது அரசு அறிவுறுத்தும் வரை, வெளியில் செல்லாமல் பாதுகாப்பான கட்டிடங்களில் தங்கி இருக்க வேண்டும். பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களிலோ மரத்தின் அருகிலோ தஞ்சமடைவதைத் தவிர்க்கவேண்டும்.
  • தேவையான உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ளவேண்டும்.
  • பலத்த காற்று வீசும் போது வாகனத்தில் வெளியில் பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும்.
  • மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் உலோக பொருட்கள் அருகில் நிற்பதை தவிர்க்கவேண்டும்.
  • வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளை கவனமுடன் கையாளவேண்டும்.
  • வீட்டில் உள்ள கதவுகள் கண்ணாடி சாலரங்கள் ஆகியவற்றை மூடிவைக்க வேண்டும்.
  • காற்று வீசுவது நின்றுவிட்டால் புயல் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் எதிர்திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதால் தேவையின்றி உடனே வெளியில் வரக்கூடாது.
  • காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும்.
  • கால்நடைகளை பாதுகாப்பான இடங்களை முன்கூட்டியே தங்க வைக்கவேண்டும்.
  • கூரைவீடு, ஓடு வீடு மற்றும் தகரசீட் போன்ற வீடுகளில் வசிப்பவர்கள் பலத்த காற்று வீசும்போது அரசு அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி அருகாமையில் உள்ள பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு முன்கூட்டியே சென்று விடவேண்டும்.
  • நீர்நிலைகளில் மீன்பிடித்தல், குளித்தல் மற்றும் வேடிக்கை பார்க்க செல்லகூடாது.
  • தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம்.
  • இடி மின்னலின்போது மரத்தின்கீழோ, பொதுவெளியிலோ இருக்க வேண்டாம்.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் தேவைப்படும் அவசர உதவிகள் மற்றும் இடர்பாடுகள் குறித்த புகார்களை எளிதில் உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அவசர கட்டுப்பாட்டு அறை( 24 X 7 மணி நேரம்) தொலைபேசி எண்கள் மற்றும் சமூக வளைதளங்கள் மூலம் தெரிவிக்கலாம்.



பேரிடர் தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்

தொலைபேசி

044-27237107

044-27237207

கைபேசி / வாட்ஸ்அப்எண்

9345440662

சமூகவலைதளங்கள்

Twitter

@KanchiCollector

@DDMAKANCHIPURAM

Facebook

@kanchicolltr

Instagram

@kanchicolltr

அவசரகாலஉதவிஎண்கள்

காவல் உதவி எண்

100

தீயணைப்பு அவசர எண்

101

ஆம்புலன்ஸ்

108

மருத்துவ உதவி அவசர எண்

104

குழந்தைகள் உதவி எண்

1098

பெண்கள் உதவி எண்

1091

என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி, தெரிவித்துள்ளார்.