கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நாளை   தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளது, இதில் மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார். அதன்படி கடலூர் மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசி முகாமை துரிதப்படுத்த, மாநிலம் முழுவதும் ஒரே நாளில் நாளை  18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விடுபட்ட தகுதியானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று  காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்தவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 909 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.




இந்த மாபெரும் தடுப்பூசி முகாமினை ஶ்ரீமுஷ்ணம் பகுதியில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தனர். இந்த மாபெரும் முகாமில் மருத்துவத்துறையுடன் வருவாய்த்துறை, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கல்வித்துறை, சத்துணவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, காவல்துறை போன்ற அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதோடு, கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் இணை நோய் கண்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இத்தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது.



மது, மாமிசம் உண்பவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் எவ்வித உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் அனைவரும் முன்வந்து தாமாகவே தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி முகாம் எவ்வித இடையூறும் இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்திட அனைத்து வட்டங்களிலும் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு, வட்டார வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்பார்வையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலூரில் கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது ,மேலும் இன்று நடைபெறும்  இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமின் மூலம் இன்று ஒரே நாளில் 1,70000 பேருக்கு தடுப்பூசி பொட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை தாக்குவதற்கு முன்னாள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அவரவர் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் தடுப்பூசி ஒன்று தான் கொரோனவினை விரட்ட நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம்.