சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.




சென்னையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்கள் 30 பேர், ஊட்டி, கூர்க் மற்றும் கோவா ஆகிய இடங்களுக்குச் சுற்றுலா சென்று திரும்பிய நிலையில், கடந்த 4ஆம் தேதி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை விடுதியில் இருக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என்று கண்டறியப்பட்டது. இவை தவிர கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும்,  சுகாதாரப் பணியாளர்கள் 7, ஸ்டாஃப் நர்ஸ் 4 பேர் , முதுகலை பட்டதாரி மாணவர்கள்  2 பேர் உள்ளிட்டோர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழ்நாட்டில் தினசரி எண்ணிக்கையில் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை நெருங்கியது. சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் ஒரேநாளில் 700க்கும் மேல் கொரோனா அதிகரித்துள்ளது. 


தமிழ்நாட்டில் இன்று 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981ஆக உள்ளது.  ஒருநாள் பாதிப்பு 6,983 ஆக இருந்த நிலையில் 1,998 அதிகரித்து 8,981 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 4,531 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 984 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண