பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்தது. ஒப்பந்த விதிகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருக்கும் பூங்கா ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிக்காகவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 704 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டும் வருகிறது. இவற்றில் 540 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பில் உள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் கோடைகாலங்களில் 30 நாட்களுக்கு ஒருமுறையும், குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறையும் புள்வெளிகளை வெட்டி பராமரிக்க வேண்டும். 7 நாட்களுக்கு ஒருமுறை அல்லது தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கிடையேயான களைகளை அகற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியான அளவில் வெட்டி பராமரிக்க வேண்டும். செடிகளின் வளர்ச்சியை பொறுத்து தேவையான பொழுது வெட்டி பராமரிக்க வேண்டும். 


புல்வெளி அல்லது செடிகள் அடர்த்தியாக உள்ள இடங்களில் வறண்டு அல்லது வளர்ச்சியின்றி இருப்பின் அவ்விடங்களில் புதியதாக செடி கொடிகளை உடனடியாக நட்டு பராமரிக்க வேண்டும். மழை மற்றும்குளிர் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், கோடை காலங்களில் நாள்தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கியற்கை உரமும், தென்மேற்கு பருவமழை காலத்தின்போது இருமுறை, வடகிழக்கு பருவமழையின் பூச்சிக்கொல்லி மருந்துகளை இடவேண்டும். 


மேலும் ஒப்பந்தத்தின் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தகுதியிடைய பணியாளர்கள் தேவையான எண்ணிக்கையில் பணியில் நாள்தோறும் இருக்க வேண்டும். பார்வையாளர்கள் புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு இருக்க வேண்டும். பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்கள் காட்சி படுத்தி இருக்க வேண்டும்.


பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களின் பராமரிப்பு பணிகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும், பராமரிப்பு பணிகளில் தொடர்ந்து குறைபாடு மற்றும் தொய்வு கண்டறியப்பட்டால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 


குடிஉயிருப்பு நலசங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களை கண்காணித்து பூங்காக்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் குறித்து மண்டல அலுவலகம் அல்லது வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் அல்லது தலையிடத்தில் உள்ள 1913 என்ற தொலைபேசி உதவி எண்ணில் தெரிவிக்கலாம் எனவும், பொதுமக்களும் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களில் உள்ள குறைபாடுகள் குறித்து தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவுறிவுறுத்தி உள்ளது.