தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா, ஒமிக்ரான் வைரஸ்கள் பரவுவதும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.


இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில்  போதிய பயணிகள் இல்லாமல் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


Palamedu Jallikattu Live | பாலமேடு பாய்ச்சலுக்கு தயாரா? இன்றும் இடைவிடாத நேரலை செய்கிறது உங்கள் ABP நாடு... HD தரத்தில் கண்டு ரசிக்க கிளிக் பண்ணுங்க!


கடந்த மாதத்தில் ஒருநாளுக்கு 30 ஆயிரத்திலிருந்து 34 ஆயிரம் பேர்வரை என பயணிகள் எண்ணிக்கை இருந்தது. ஆனால் தற்போது கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் காரணத்தால் கடந்த வாரம் அந்த எண்ணிக்கை 20 ஆயிரமாக குறைந்துவிட்டது.  இதனால் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையும் 270லிருந்து 206ஆக குறைந்தது. தற்போது அது மேலும் 183ஆக குறைந்திருக்கிறது.




இதற்கு பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைதான் காரணமாக கூறப்பட்டாலும் வைரஸின் அதீத பரவல்தான் பிரதான காரணம் என சொல்லப்படுகிறது.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் 32 ரத்து செய்யப்பட்டன.


 



அதன்படி சென்னைக்கு வர வேண்டிய பெங்களுரூ, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, தூத்துக்குடி, மதுரை, புனே, விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஞ்சி உள்ளிட்ட 16 விமானங்களும், 




சென்னையிலிருந்து மேற்கூறிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 16 விமானங்களும் என மொத்தம் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இயக்கப்படும் விமானங்களிலும் பயணிகள் குறைவாக பயணிப்பதால் இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.


இதற்கிடையே விமானம் ரத்து செய்யப்பட்டால் பயண கட்டணம் பயணிகளுக்கு மீண்டும் அளிக்கப்படமாட்டாது.  அதற்கு பதிலாக வரும்  மார்ச் 31ஆம் தேதிக்குள் அந்த டிக்கெட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.


முன்பதிவு செய்த நகரங்களுக்கு மட்டும்தான் பயணீக்க வேண்டும் என்பதல்ல உள்நாட்டு விமானத்தில் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேசமயம், விமான நிறுவனங்களின் இந்த அறிவிப்புக்கு பயணிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மேலும், பயண கட்டணத்தை தங்களுக்கு மீண்டும் அளிக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண