திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் வகுப்பறை எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி சட்டமன்றத் தொகுதி குறித்து மாணவர்களுக்கு நேரடியாக உரையாற்றினார். இந்தியா வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு வெளிப்படையாக, மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் விதமாக பதில் அளித்த திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாணவர்கள்
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு பொன்மார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சார்ந்த 50 மாணவ, மாணவியர்கள் பாடத்திட்டத்தை கடந்து அரசு திட்ட பணிகள் குறித்து, அறிந்துக்கொள்ள திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜியை மாணவ மாணவிகளுடன் கலந்து கொண்டு சட்டமன்றத் தொகுதி சார்ந்த விஷயங்களை, வளர்ச்சித் திட்டங்களை மாணவர்கள் மத்தியில் எடுத்து உரைத்தனர். மாணவர்களும் தங்களுடைய பல்வேறு சந்தேகங்களை அவரிடம் கேட்டு அறிந்தனர்.
செயல்பாடுகள் எப்படி இருக்கிறது ?
மாணவர்களிடையே அரசு முன்னேடுக்ககூடிய திட்டங்களை பற்றிய புரிதல் ஏற்படுத்தும் நோக்கத்தோடு, திருப்போரூர் சட்ட மன்றத்தில் உள்ள பல்வேறு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு அரசின் திட்டங்களை விளக்குவதற்கும், சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது, மக்களுக்கு எப்படி உதவுகின்றது என்பது குறித்தும் அழைத்துவரப்பட்டு எடுத்துரைக்கப்படுகிறது.
திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினர்
அந்த வகையில், மாணவர்களுக்கு சட்ட மன்ற உறுப்பினர் பணி, சட்ட மன்றத்தின் பணி ஆகியவை குறித்தும், அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. பொன்மார் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் நடந்து முடிந்த மனுநிதி நாள் முகாமிலும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகளையும் பார்வையிட்டனர். அதன் தொடர்ச்சியாக திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்து அரசின் திட்டம், அதன் பணிகளை கேட்டறிந்தனர்.
இதில் மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு விடை அளித்த எஸ்.எஸ். பாலாஜி கூறுகையில்.
மாணவர் : இந்திய வளர்ச்சிப் பணிக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ., பாலாஜி கூறுகையில், இந்தியாவினுடைய வளர்ச்சிக்கு தடை என்று நீங்கள் பார்ப்பது எது என்று மாணவர்கள் கேட்டிருந்தார்கள் அது வெளிப்படையாக அனைவரும் பார்க்க கூடிய ஒன்றுதான் மற்ற நாடுகளில் ஏற்றத்தாழ்வு, வேறுபாடு, பாகுபாடு உள்ளது. ஆனால் நமது நாட்டில் எந்த பாகுபாடும் என்பது, எந்த ஒரு அறிவியல் அடிப்படையும் இல்லாமல் அதேற்கென எந்தவிதமான பொருளும் கற்பிக்க முடியாத அளவிற்கு மனிதனுக்கு ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட கூடிய சாதி ஏற்றத்தாழ்வு ஒன்றுதான், இந்தியாவிற்கான மிகப்பெரிய ஒரு தடை என்று எடுத்து கூறினார். மாணவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் சந்தித்த நிகழ்வு, புதிதாகவே இருக்கிறது.