சென்னை விமான நிலையத்தில் உயிருக்கு போராடிய பயணிக்கு சிஐஎஸ்எஃப் வீரர்கள் முதலுதவி வழங்கினர்
கடந்த சனிக்கிழமை துர்காபூரைச் சேர்ந்த திரு. சேகர் ஹஸ்ரா என்பவர் இருதய நோய்க்கு சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார். அப்போது சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை போர்டிங் அருகே நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்தார்.
முதலுதவி:
அபோது அங்கு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் நபர், உடனடியாக அப்பல்லோ மருத்துவக் குழுவுக்கு மருத்துவ அவசரச் செய்தியை தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக் குழுவினர், நாடித் துடிப்பைச் சரிபார்த்த போது மிகவும் குறைவாக இருந்தது. அதைய்டுத்து செவிலியர் CPR கொடுக்கத் தொடங்கினார். நாடித் துடிப்பு தொடர்ந்து குறைவாக இருந்ததாலும், முன்னேற்றமடையாததாலும் CPRஐ கைவிடாமல் வழங்கினர்.
பின்னர் முதலுதவிக்குப் பின் மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அந்த பயணியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணியை காப்பாற்றும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவத்தையடுத்து டி ஐ ஜி., கே. வி .கே. ஸ்ரீராம் அறிவுறுத்தலின்படி சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஏதேனும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் சுவாசம் பாதிக்கப்பட்டால், மருத்துவர்கள் வரும் வரை காத்திருக்காமல், சிஐஎஸ்எஃப் வீரர்களை பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Also Read: தமிழ்நாடு அரசுக்கு எதிராக பரிந்துரையா? ஆளுநர் ரவியின் டெல்லி விஜயம் குறித்து பரபரப்பு தகவல்!