திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 236  குழந்தை திருமணங்கள்  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, இதில் 181 திருமணங்கள் நிறுத்தப்பட்டு அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தையை அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக அனுமதிக்க பட்டுள்ளோம் . அதே போன்று இந்த வருடம் ஆறுமாத காலத்தில் 105  குழந்தை திருமணம் நடைப்பெற்ற இருந்தது இதில் 55 திருமண்ங்கள்  நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திருமணங்கள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காலத்தில் அதிக அளவில் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதற்கான காரணங்கள் தற்போது கொரோனா தொற்று வைரஸ் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது . ஊரடங்கு காலத்தில் பெண்குழந்தைகளின் பெற்றோர்கள் வேலையின்மை காரணத்தாலும்  வருமைகாரணத்தாலும் நடைபெறுகின்றது. இதனால் குழந்தைகள் வீட்டிலேயே உள்ளதாலும் , இதில் பெரிய பங்காக அப்பா அல்லது அம்மா இழந்த குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் ஒரே குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று பெண்குழந்தைகள் இருப்பதால் பெற்றோர்கள் மற்றும்  உறவினர்கள் இதுபோன்ற குழந்தை திருமணங்களை நடத்துகின்றனர். இதில் குறிப்பாக மாசி, பங்குனி, சித்திரை முகூர்த்த மாதங்களில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றது. 


மேலும்  இதனை தடுக்கு முயற்சிக்கவும் முழுவதும் குழந்தைகள் திருமணங்களை  கட்டுப்படுத்துவதற்கான  முயற்சிகளை சமூகநலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணம் நடைபெறுகிறது. முகூர்த்த நாட்களில் குழந்தை திருமணம் நடைபெறுவது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. மேலும் மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் குழந்தை திருமணம் நடைபெறுவதை அதிகரித்துக் கொண்டே உள்ளது. 


 




 



குழந்தை திருமணம் உள்ளதால் கர்ப்பப்பை முழுவளர்ச்சியடையாத காரணத்தினால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும், தாய்சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் ரத்த சோகை உடல் மற்றும் மனம் பாதிப்பு அடைவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவை எல்லாவற்றுக்கும் மேலாக படிக்கும் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வியறிவு தடைபட்டு படிப்பறிவு பொது அறிவு போன்றவை ஏற்படுகிறது இதனால் பாலியல் ரீதியான பிரச்சனைகள் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மேலும் கணவன் மனைவிக்கிடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இளம்விதவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெண்ணிற்கு 18 வயதும் ஆணிற்கு 21 வயதும் நிறையாத நிலையில் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். குழந்தை திருமண தடை சட்டம் 2006ன்படி குழந்தை திருமணம் என்பது ஜாமீன் வழங்கா குற்றமாகும் குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ 1லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது 2ம் உண்டு. 18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட 18 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர் குற்றவாளி ஆவார். அதேபோல் 21 வயது நிறைவடையாத ஆண்மகனை திருமணம் செய்யும் பெண்ணும் குற்றவாளி ஆவார். குழந்தை திருமணத்தை நடத்தியவர் நடத்த தூண்டியவர் என அனைவரும் குற்றவாளிகள்.




 


பெண் குழந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள் தங்கள் காப்பாளர் மற்றும் குழந்தை திருமணத்தை ஏற்பாடு செய்ய அனுமதித்த பங்கேற்ற மற்றும் அந்த திருமணத்தை தடுக்க தவறிய அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.


அச்சகங்களுக்கு கட்டுப்பாடு


திருமண பத்திரிகை அச்சடிக்கும் அச்சக உரிமையாளர்கள் மணமக்களின் வயதுச்சான்றை சரிபார்த்து பெண்ணிற்கு 18 வயது மற்றும் ஆணிற்கு 21 வயது நிறைவடைந்துள்ளதா என உறுதி செய்த பின்னரே திருமண பத்திரிகை அச்சடிக்க வேண்டும். 


மேலும் திருமண மண்டப உரிமையாளரும் வயது உறுதி செய்த பின்னரே திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவதாக முன்கூட்டியே தகவல் அறிந்தால் பொதுமக்கள் அதுபற்றி உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.



 


மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட சமுக நல அலுவலகம், காவல்துறை ஆகிய அலவலகங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரது விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில் அந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்படும்.


 எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் குழந்தை திருமணம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.