சென்னையில் பல்வேறு பிரிவுகளாக பல ஆயிரம்  கோடி மதிப்பீட்டில் மழைநீர் மற்றும் வெள்ளத்தடுப்பு கால்வாய் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அவற்றில் பல பணிகள் நீண்டகால பணிகள் என்பதால், அவற்றின் பணிகள் உடனடியாக முடியாது. அந்த பணிகள் இப்போது நிறைவடையாததால் நகரப்பகுதிகளில் மழை நீர் வடிவதில் அமைக்கும் பணியில் பெரிய சிக்கல்கள் ஏற்படாது. ஆனால், மாநகரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்கப்பட வேண்டிய சூழலில் உள்ளது. அதனால் அவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.


பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் தற்போது பெய்யும் சிறு மழைக்கே சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் தேங்கி, வெள்ளம் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.  இந்த சூழலை உணர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் ஆய்விற்கு பின்  கூறியுள்ளார்.  ஆனால், பருவமழைக்குள்ளாக இந்தப் பணிகளை நிறைவு செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மை.


இந்த நிலையில், காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தனியார் தொலைகாட்சி நிறுவனத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்த 24 வயதான முத்துகிருஷ்ணன் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவததை தொடர்ந்து தமிழக அரசு தலைமை செயலாளர் வெ.இறையன்பு, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், தொடர்புடைய, துறை தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.


அதில்  "சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவுபெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கும் பாதசாரிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களும் மற்றும் குழிகளும் முடப்படாதிருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் (Barricade) மற்றும் அடையான பலகைகள் (Sign Boards) வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


மேலும் சாலைகளில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள Manual Cover திறந்திருப்பின், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் தடுப்புகள், அடையான பலகைகள் (Sign Boards) ஆகியவற்றை மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Chennai : தோண்டப்பட்ட மழைநீர் வடிகாலில் தவறி விழுந்த இளம் பத்திரிகையாளர் உயிரிழப்பு - சென்னையில் சோகம்


Chennai Drainage : "மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் 3 நாட்களில் முடிவடையும்" - அமைச்சர் எ.வ.வேலு


Traffic New Rules : வாகன ஓட்டிகளே உஷார்..! இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய அபராதம்..! ஒழுங்கா ஓட்டுனா தப்பிக்கலாம்..