சென்னையில் கனமழை பெய்ததையையடுத்து முதல்வர் ஸ்டாலின் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டர். 


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் “மக்கள் திமுக அரசை பாராட்டுவதை சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் விமர்சனங்களை சிலர் வைக்கின்றனர். இதை அரசியலாக்கி, வியாபார பொருளாக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், சென்னையில்,கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்து விட்டது. வருங்காலத்தில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயார் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.



தூய்மை பணியாளர்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்:


இதையடுத்து, மழை நிவாரண பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.  தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி, மீன் வறுவல் உள்ளிட்ட உணவுகளுடன் விருந்து வைக்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உணவு பரிமாறியதோடு அவர்களுடன் முதலமைச்சரும் அமர்ந்து உணவருந்தினார். 





கரையை கடந்த காற்றழுத்தம்:


 தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


புயல் சின்னம் கரையை கடக்கும் போது சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் காற்றுடன் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில்,
புயல் சின்னமானது இன்று காலையில் சென்னைக்கு அருகில் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடந்து உள்ளது.  சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை மேகங்கள் இல்லாததன் காரணமாக சென்னையில் மழை விலகியது . இன்று வெயில் அடிக்க ஆரம்பித்தது.


இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் , நிவாரண பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டினார்.