காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தற்போது ஆஷாட நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி உற்சவத்தில் காமாட்சி அம்மனையும், வராகி அம்மனையும் தரிசனம் செய்வது சிறப்பானது என்பதை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் வருகை தந்தார்.



 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆஷாட நவராத்திரியை ஓட்டி  சிறப்பு அலங்காரத்தில் வீணையுடன் காட்சி அளித்த காமாட்சி அம்மனையும், வராகி அம்மனையும் தரிசித்து உலக நன்மை வேண்டி துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார். முதலமைச்சரின் துணைவியார் என்ற எந்தவிதமான ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் 

துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு வந்து காமாக்ஷி அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றது கோவிலுக்கு வந்த பக்தர்கள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேற்கு கோபுரம் வாசல் வழியாக வருகை புரிந்து சாமிதரிசனம் மேற்கொண்டார். பொதுமக்கள் அனைவரும் கிழக்கு கோபுர வாசல் வழியாகத்தான் சாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கம்.



மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களிடம் சாதாரணமான முறையில் பேசி நலம் விசாரித்து சென்றது, பக்தர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ் பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்ட பிறகு , காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். சங்கரமடம் பூஜைகள், ஆன்மீகம் நிகழ்வுகள் குறித்தும் கேட்டறிந்தார். 30 நிமிடம் சங்கரமடத்தில் துர்கா ஸ்டாலின் இருந்தார். பின்பு விஜயேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்ற துர்கா ஸ்டாலின் சென்னை புறப்பட்டுச் சென்றார். தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி தொடர்ந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



பொதுவாக காஞ்சிபுரம் வரும் அரசியல் தலைவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை சார்ந்த நபர்களே அதிகமாக காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு செல்வதும், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெறுவதும் வழக்கமாகக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது  தமிழக முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் அவர்களும் சங்கர மடத்திற்கு சென்று ஆசி பெற்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளளது.



 

காஞ்சிபுரத்தில்  உலகப் புகழ்பெற்ற ராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நடைபெற்றபொழுது, இரண்டு முறை துர்கா ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்து, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்தி வரதர் தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இது உங்களுக்காக :-